தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி பூஜையுடன்
சனி தோஷ நிவர்த்தி யாகம்.
வேலுர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் பக்தர்கள் ஆரோக்கியத்திற்காகவும், சனி பகவானின் உக்கிரம் தணியவும், உலக மக்களின்
நலன் வேண்டியும், வருகிற 04.11.2017 சனிக்கிழமை
காலை 10.30 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைபடி
நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் ஏழரை சனி, சனி புக்தி, சனி தசை, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம
சனி போன்ற தசை, புக்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்தும், பிரச்சனைகளில்
இருந்தும் விடுபடவும், திருமணம், குழந்தைபேறு, தொழில், உத்யோகம், வியாபாரம்
போன்றவைகளால் ஏற்படும் தடைகள் நீங்கவும் படிப்பில் கவனம் செலுத்த முடியாத மாணவர்களும், தேவையற்ற மன அழுத்தங்களுக்கு ஆட்பட்டவர்களும், வழக்கு வியாஜ்யங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, மேற்கண்ட
யாகம் நடைபெறுகிறது.
யாகத்தில்
சேர்க்கவுள்ள விசேஷ திரவியங்கள்………….
மேலும் இந்த ஹோமத்தில் கருப்பு நிறம், நீல நிறம் வஸ்த்திரங்கள், எள்ளு, நல்லெண்ணெய், வன்னி சமித்து, வன்னி
இலை, எள்ளு சாதம், இரும்பு பாத்திரங்கள், நெல்பொறி, விசேஷ மூலிகைகள், வெல்லம், பால், தயிர், தேன், எலுமிச்சை போன்றவைகள் சேர்க்கப்படவுள்ளன.
காலச்சக்கரத்தில்
கலச தீர்த்தம்………..
யாகத்தின் முடிவில்
கலச தீர்த்தத்தை
நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக
விருட்சங்களுக்கும் தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில்
சனீஸ்வர கிரகத்திற்குரிய வன்னி விருட்சத்தில் சேர்த்து விருட்ச பூஜையும் நடைபெற உள்ளது. இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203
No comments:
Post a Comment