ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஞான சரஸ்வதி மஹா யாகம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை “ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மாணவ மாணவியர்களின் கல்வித்தரம் உயரவேண்டியும், ஞானத்தின் பிறப்பிடமான கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் அருள்பெற
இன்று 29.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மஹா சரஸ்வதி யாகம் நடைபெற்றது.
கல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானதுதான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற மஹாசரஸ்வதி யாகத்திலும்
சிறப்பு அபிஷேகத்திலும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், நடுநிலையாளர்கள், வழக்கறிஞர்கள்
மற்றும் பலர் பங்கேற்று பலன் பெற்றனர். சரஸ்வதியின் பாதங்களிலும் யாகத்திலும் வைத்து பூஜித்த எழுது பொருட்களான நோட்டு புத்தகம், பேனாக்களை ஸ்வாமிகள் திருக்கரங்களால்
மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிலை உயர்வதற்கு அருட்பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment