Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, September 2, 2017

தன்வந்திரி பீடத்தில் இலட்சார்ச்சனையுடன் குருப் பெயர்ச்சி மகாயாகம் நடைபெற்றது.











  மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம்  எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான்குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்திஎன்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.
இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கியபஞ்சாங்கப்படி இன்று 02.09.2017 சனிக்கிழமை  காலை 9.30 மணியளவில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று இலட்சார்ச்சனையுடன்  குருப்பெயர்ச்சி மஹாயாகம்,மற்றும்  ஸ்ரீதட்சிணாமூர்த்திக்குசிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை 6.00 மணி முதல் 6.15 மணி வரை - சுப்ரபாதம்.6.15 மணி முதல் 6.30 மணி வரை - கோ பூஜை. 6.30 மணி முதல் 7.00 மணி வரை - வேத பாராயணம்.7.00 மணி முதல் 7.30 மணி வரை - யாக சாலை பூஜைகள் 8.00 மணி முதல் 09.00 மணி வரை - சூக்த பாராயணம், 09.00 மணி முதல் 11.00 மணி வரை - குரு பெயர்ச்சி மஹா யாகம்.11.00 மணி முதல் 11.30 மணி வரை -, மஹா பூர்ணாஹுதி.11.30 மணி முதல் 12.00 மணி வரை - கலச புறப்பாடு.12.00 மணி முதல் 12.30 மணி வரை - பஞ்ச திரவிய அபிஷேகம், சூக்த பாராயணம்.12.30 மணி முதல் 1.00 மணி வரை - மஹா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மஹா தீபாராதனை.1.00 மணி முதல் - பிரசாத விநியோகம். நடைபெற்றது.குரு பெயர்ச்சியை முன்னிட்டு  வியாழக் கிழமை மாலை தொடங்கப்பட்ட இலக்ஷார்ச்சனை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஹோமத்தில் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம். மீனம். இராசி நேயர்கள், குருபுத்தி குருதிசை, நடைபெறும் அன்பர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைசெய்தனர். இதில்தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மலேசியா, சிங்கப்ர், கனடா, போன்ற இடங்களிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment