Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, March 21, 2015

மாந்தி நின்ற பாவங்களின் பலன்கள் மற்றும் பரிகார முறைகள்...

முதல்பாவம் :
ஜென்மத்தில் மாந்தி நிற்கும் ஜாதகன் முகலட்சணம் குறைவாக இருப்பான் அவன் முகத்தில் பிறரை கவரும் ஒளி குறைவாக இருக்கும்.முக்கிய பதவிகளில் அவன் அமர்ந்தாலும் கீழே பணிபுரிபவர்கள் மத்தியில் பயம் , மரியாதை அவனுக்கு பூரணமாக கிடைக்காது. விளையாட்டு மற்றும் வீரச்செயல்களில் ஈடுபடும் அளவு கட்டுமஸ்தான உடலமைப்பு அமையாது. மன ரீதியாக எப்போதும் சற்று வாட்டத்துடன் காணப்படுவான் . பொது இடங்களில் பெயர், புகழ், கெளரவம் கிடைக்காது . முகத் தோற்றத்தில் கவர்ச்சியும் , அழகான வடிவமைப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும். தெய்வீக பக்தியும் , பெரியோரிடத்தில் பணிவும் , மரியாதையும்  மற்றும் நற்குணங்களும் குறையும். மன மகிழ்ச்சி குறையும். பலருக்கு எப்போதும் நோய் இருந்து கொண்டே இருக்கும் . ஊனம் இருந்து ஜெனனம் ஆனாலோ பின்னர் ஊனம் பெற்றாலோ மேலே கண்ட குணாதியசங்கள் மாறும்.

இரண்டாம் பாவம் :
குடும்ப ஸ்தானத்தில் நின்ற மாந்தி குடும்பத்தின் ஒற்றுமையையும் , மகிழ்ச்சியையும் பெரிதும் பாதிக்கும். கெட்ட பெயர் பெற நேரிடும், இலக்கனத்திற்கு நான்காம் ஐந்தாம் பாவ அதிபதிகள் சேர்ந்து இருந்தாலோ அல்லது நான்காமிட அதிபதி மறைவு பெற்றாலோ தாயாரின் தேக ஆரோக்கியம் கெடும். வாக்கு சுத்தம் இருக்காது . தனலாபம் மிகவும் குறைவாக இருக்கும். யோகம் மற்றும் முன்னேற்ற நிலைக்கு செல்லும் வாய்ப்பு , ஆபரணம் அணியும் யோகம் , குடும்ப சந்தோஷம் , பூரண செல்வம் ஆகியவை மிக மிக குறைவாக இருக்கும் . சிலருக்கு கண்பார்வைக் குறையும், மாரகத்துக்கு சமமான கண்டங்களை அடிக்கடி எதிர் கொள்ளவும் நேரிடும். கல்வி தடைபடும். பெரும் பாக்கியங்களை அடைய முடியாது. பெற்றோரை பிரிந்து வாந்தால் மேற்கண்ட கெடு பலன்களிலிருந்து விடுபடலாம்.

மூன்றாம் பாவம் ;
சகோதர ஸ்தானத்தில் மாந்தி அமர ஜாதகருக்கு இளைய சகோதரம் அமையும் யோகம் குறையும். அப்படியே அமைந்தாலும் இளைய சகோதரமும் நிலைக்காது. நிலைத்தாலும் துளியளவும் பயனில்லை . தைரியம் , பராக்கிரமம் , முதலியவைகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது. வீரதீர செயல்கள் அனைத்தும் படு தோல்வியையும் மிகுந்த கஷ்டத்தையும் தரும். காரிய தடை ஏற்படும், வெற்றி கிடைக்காது . அறுசுவை உணவு உண்ணும் வாய்ப்பு குறைவு . ஆபரண யோகம் , கலைகளில் ஈடுபாடு மற்றும் திருப்தி இருக்காது . பணியாட்கள் வைத்து நடத்தும் யோகம் குறைவு . மாரக திசைகளில் சுய புத்திகளில் மாரகம் தரும். ஆயுள் குறைவு.


நான்காம் பாவம் :
சுக ஸ்தானத்தில் மாந்தி அமர்ந்தால் தாயாருக்கு எந்த யோகமும் கிடையாது. தாயாருக்கு குடும்பத்தில் முக்கியத்துவம் மற்றும் அதிகாரம் செய்யும் நிலை குறைவாகும். தாயாரிடத்தில் தந்தைக்கு அன்பு, பாசம் குறையும் . மேற்கல்வி கற்கும் வாய்ப்பும், வாகன யோகமும் மிகவும் குறைவாக இருக்கும் . தாய்வழி உதவி கிடைக்காது. விவசாயம் எதிர் பார்த்த பலனை தராது. கிணறு வெட்டுதல் , ஆழ்துளை கிணறு அமைப்பதிலும் யோகம் கிடைக்காது. கால்நடைகள் வைத்து வாழும் நிலை இருக்காது. நல்ல நண்பர்களும் , நண்பர்களினால் உதவியும் இருக்காது, மேலும் அவர்களால் சிரமங்களும், விரயங்களும் ஏற்படும். நிம்மதியற்ற வாழ்கை அமையும், மன சங்கடம் நிறைய இருக்கும். சுகம் குறைவும்.

ஐந்தாம் பாவம் :
புத்திர ஸ்தானத்தில் மாந்தி நிற்க குரு துரோகம் செய்யும் நிலை ஏற்படும். பிராமண பெண் சாபம் பெற நேரிடும். புத்திர தோசத்தை தரும். எப்படியும் ஒரு புத்திரத்தையாவது இழக்க நேரிடும் . முன் ஜென்மத்தில் செய்த தீவினைகளை அனுபவிக்க நேரிடும். சுற்றங்கள், சொந்தங்களின் பகையும் தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் தொடர்பும் விட்டுப் போக நேரிடும். அறிஞர் பெருமக்களின் நற்பெயரில் களங்கம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் நிலைத்த பயன் தராது. பக்தி பகல் வேஷமாகவும், பதவி பயன் தராமலும் இருக்கும்.

ஆறாம் பாவம் :
மாமன் ஸ்தானத்தில் மாந்தி நிற்க உற்றார் , உறவினருடன் கூடி வாழ முடியாது. தனித்து வாழ்வதே பெருமை, நிம்மதி கிடைக்கும். எந்த வகையிலும் கடன் வந்து சேரும் . நோய் தரும், நிறைய எதிரிகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். ஆனால் எதிரிகளால் பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டி இராது. எதிரிகள் தானாக விலகுவார்கள் ஆயின் புதிய எதிரிகளும் தோன்றுவர், மாமன் உறவு பெயரளவில்தான் இருக்கும். மாமன்மார்களும் யோகம், செல்வம் பெற முடியாது . தம்பதிகளுக்குள் வழக்கு , சண்டை நீண்ட காலம் இருக்கும். வாழ்வில் பயம் இருந்து கொண்டே இருக்கும். சர்ப்பம், தண்ணீர், பெண்கள் இவர்களால் துன்பமும், பீடையும் ஏற்படும். வெளி தேகத்தில் நோய் இருக்கும்.

ஏழாம் பாவம் :
களத்திர ஸ்தானத்தில் மாந்தி நிற்க களத்திர தோசம் தரும். நல்ல களத்திரமும், சுக வாழ்வும் இருக்காது. களத்திரத்தை இழந்து பிரிந்து வாழவும் நேரும். வியாபாரம் பலன் தராது . அலங்காரம் செய்து கொள்ளும் யோகம், சுப யோகம் மிகவும் குறைவு. அரசு சன்மானம் பெறும் யோகம் குறைவு . யாத்திரையின் மூலம் நன்மை பெற வாய்பு இல்லை. தொழிலில் நல்ல கூட்டாளி அமைய மாட்டார்கள். களத்திர தோஷம் காரணமாக கண்டம் ஏற்படலாம், இருதாரம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உண்டு , நிரந்தர தொழில், போதுமான வருமானம் அமையாது.

எட்டாம் பாவம் :
மாரக ஸ்தானத்தில் மாந்தி நிற்க தன விரயம் மிகவும் அதிகமாக இருக்கும். தாய் , தந்தை உறவில் விரிசல் அதிகம் ஆகும். பிரியாமல் பிரிந்து வாழும் நிலை, பீடை ஏற்படும். காரியங்களில் ஜெயம் கிடைப்பது மிக மிக அரிது. மனவருத்தம் அதிகமாக இருக்கும். பெற்றோர் அல்லது ஜாதகர் விஷம் மற்றும் ஆயுதத்தினால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எவ்வளவு வருமானம் வந்தாலும் தரித்திரம் தாண்டவமாடும். விபத்து மாரகத்துக்கு நிகரான கண்டம் ஏற்படும். வில்லங்கமான நிலை ஏற்படும், பங்காளி வகையில் மிகுந்த பீடை தரும். எடுத்த காரியம் முடியாமல் போகும். பகை வழக்கை எதிர்கொள்ள நேரிடும், ஜாதகர் பெண் ஆனால் மாங்கல்ய பலம் குறையும். கணவனுக்கு உயிர் சேதத்திற்கு ஒப்பான கண்டத்தை தரும்.

ஒன்பதாம் பாவம் :
பிதா ஸ்தானத்தில் மாந்தி அமந்தால் தந்தைக்கு கடும் பீடை ஏற்படும். தந்தைக்கு மன சஞ்சலத்தை அதிகமாக்கி அவர் எந்த சுய முடிவும் எடுக்க முடியாமல் தவிப்பார். இதனால் பலரிடத்தில் அவமானமும் , குதர்க்கவாதி என்ற பெயரும் பெறுவார். தந்தை நம்பிக்கைக்கு பாத்திரமாக இல்லாமல் எவரும் உதவி செய்ய முன் வராத நிலையை தரும் . தந்தை பெரும் தவிப்புடன் வாழ்கை நடத்துவார் . நிலையான நிம்மதியை இழப்பார் , தருமம் செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. பொது நல சேவையில் நல்ல பெயர் கிடைக்காமல் கெட்ட பெயரையே சம்பாதிக்க நேரிடும். பொது நலன் வேண்டி செய்யும் காரியங்கள் தோல்வி அடையும் . ஆலயம் அமைக்கும் யோகம் மிக மிகக் குறைவு . இருக்கும் செல்வத்தையும் சுகமாக அனுபவிக்க முடியாத நிலை தோன்றும் . குரு உபதேசம் பயன் தராது. தீர்த்த யாத்திரை முழுமை அடையாது. புதிய முயற்சிகள் வெற்றியை தராது . அதிர்ஷ்டம் என்பது மருந்துக்கு கூட இருக்காது . வழி நடத்தி செல்ல தகுந்த நபர் அமையாமல் போவார். பாக்ய யோகம் குறைவு.

பத்தாம் பாவம் :
ஜீவன ஸ்தானத்தில் மாந்தி அமர சுப பலன்களை தருவார். தெய்வ வழிபாடு பூஜை புனஸ்காரங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். அரசு பதவி கிடைக்கலாம் . வியாபாரம் மற்றும் தொழில் நிரந்தரமாகும், பொருள் தேடி வரும். முன்னோர்களின் பிதுர் கடன் பெருகி பலரை தனது தயவுக்காக காத்திருக்க வைக்கும் யோகம் கிடைக்கும். பராக்கிரம செயல்களால் புகழ் கிடைக்கும். அறுசவை உணவு உண்ண வாய்ப்பு  ஏற்படும் . விதவிதமான ஆடைகள் ஆபரணங்கள் மேல் விருப்பம் ஏற்படும் . பூமி , வீடு , வாகன யோகம் உண்டு . பிரபலம் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் . பொது சேவையில் புகழும் கிடைக்கும் . ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால் ஆளும் பதவியும், புதன் பலம் பெற்றிருந்தால் நாடறிந்த வித்யாகாரன் ஆகும் நிலை ஏற்படும். உயர்ந்த கல்வி அல்லது உயர்ந்த நிலை உண்டாகும். செயல்திறன் அதிகம் இருக்கும் . தொழில்ஞானமும் செயல் ஆர்வமும் மிகுதியாக இருக்கும். பெற்றோர்கள் பெருமை அடைவர்.

பதினொன்றாம் பாவம் :
இலாப ஸ்தானத்தில் மாந்தி நிற்க நிறைந்த இலாபம் தருவார். சிலர் மிக மிக சாதாரணமாக வாழ்கை நடத்தி வந்து மாந்தி நின்ற ராசி அதிபதியின் திசா புத்தி காலத்தில் திடீரென்று பாதை மாறி புதிய பாதை அமைத்து உயர்ந்த நிலைக்குச் செல்வர். கல்வி சுமாராக இருந்தாலும் அதை வைத்து உயரும் யோகம் கிடைக்கும் . ஜாதகரால் மூத்த சகோதர்கள் நன்மை , பெருமை அடைவர். வெளியூர் செல்லும் வாய்ப்பும், பொருள் தேடி வரும் நிலையும் தரும். ஆடை , ஆபரணம், பொன் , பொருள் சேர்க்கை தரும். சிலருக்கு புதையல் போன்றவற்றால் திடீர் லாபம் தேடி வரும். சிலருக்கு மனைவி மூலம் உயர்ந்த நிலை ஏற்படும். இருப்பிட மாறுதல் நன்மையைத் தரும்.

பன்னிரண்டாம் பாவம் :
விரய ஸ்தானத்தில் மாந்தி நிற்க மிகுந்த விரயங்களைத் தரும். நிம்மதியான உறக்கம் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும். திருமண சம்பந்தமாக மிகுந்த விரயம் தரும். பிற தேச வியாபாரம் அமைந்தாலும் பயன் தராது. சிலருக்கு ஐந்தாம் பாவம் பலம் குறைந்தால் இது நேரிடுகிறது.

இவ்வாறு மாந்தி தான் நின்ற பன்னிரண்டு பாவங்களிலும் மேற்கண்ட பலன்களை தருகிறார். சுபர் பார்வை . ஸ்தான அதிபதி பலன் பெறுதல் போன்றவை மாந்தியின் கடமைகளில் குறுக்கிட்டு பெரும் பாதிப்பு செய்வதில்லை . பெரும்பான்மை பலம் மாந்தியின் பலமாகவே இருக்கிறது.

மாந்தி சாந்தி பரிகாரம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்...

மாந்தி கிரகம் மிகவும் ஒரு கொடுமையான கிரகம் என்பார்கள், இந்த கிரகம், யாருடைய பாவத்தில் சேருகிறதோ அந்த பாவக் காரருக்கு மேலும் பல தோஷங்களை ஏற்படுத்தும் என்பது பொதுவான ஜாதக விதி.

ஒருவருக்கு மாந்தி கிரகத்தினால் பலவகையான தோஷங்கள் ஏற்படும் என்பார்கள். இவற்றுக்கு மாந்தி சாந்தி பரகார ஹோமம் மிகவும் பலன் தரும்.  இந்த ஹோமத்தில் கருப்பு கடுகு, எள், வெல்லம, நெற்பொறி, நல்லெண்ணெய், கருப்பு வஸ்திரம், வன்னி சமித்து, நெய் சாதம் ஆகியவை கொண்டு மாந்தி கிரகத்திற்கு உரிய தியான சுலோகங்களையும், மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரம் கொண்டு நம்பிக்கையுடன் குலதெய்வம், குடும்ப தெய்வத்தை ப்ரார்த்தித்துக் கொண்டு பித்ருக்களை தியானித்து அதிக எண்ணிக்கயில் ஜபம் செய்து முறையாக ஹோமம் செய்தால்  சர்வ ஹரிஷ்ட தோஷங்கள் விலகி நன்மை ஏற்படும்.

பூத, பிரேத பிசாசுகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், கமன், தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள் அகலவும், ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவைகளால் ஏற்படும் கஷ்டங்கள் விலகவும், அகால மரணம், துர் சொப்பணம், கொடிய வியாதிகள், நிகழாமல் இருக்கவும் வழிவகை கிடைக்கும்.

மேற்கண்ட ஹோமம் தன்வந்திரி பீடத்தில் சாஸ்த்திர முறைப்படி செய்துதரப்படும்.

No comments:

Post a Comment