Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, February 18, 2015

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ப்ரத்யங்கிரா தேவி யாகம்

·        
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 18.02.2015 புதன்கிழமை இன்று மாசி அமாவாசையை முன்னிட்டு  சிறப்பு மகா ப்ரத்யங்கிரா தேவி யாகம் நடைபெற்றது.

·         பித்ருக்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்அமாவாசை தினத்தில் தான்  நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது.
இந்த ஹோமத்தில்  ராகு கேது தோஷம் விலகவும் ராகு தசை ராகு புக்தி. சனி தசை, சனி புக்கி போன்ற தசாபுக்தி தோஷங்கள் விலகவும் நவக்கிரஹங்களால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், பித்ரு தோஷம், நாக தோஷம், காலசர்ப தோஷம் போன்ற தோஷங்களுக்கு  நிவாரணம் கிடைக்கவும் வாழ்வில் அனைத்து விதமான செயல்களில் நன்மை ஏற்படவும் தன்வந்திரி பீடத்தில் மகா ப்ரத்யங்கிரா தேவி யாகம் விசேஷ திரவியங்களை கொண்டு காலை 10.00 மணிமுதல் 1.00 மணிவரை நடைபெற்றது. இந்த யாகத்தில் மேலும் திருமணத் தடை தொழில் தடை வியாபார தடை சத்ரு உபாதைகள், பொரளாதார தடைகள், கடன் பிரச்சனை பித்ரு தோஷம், பில்லி சூன்யம், செய்வினை கோளாறுகள் மாந்திரிக தொல்லைகள் மாங்கல்ய தோஷம் ஆயுள் சம்பந்தமான தோஷங்கள் நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும் இந்த மாபெரும் ஹோமங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கூட்டுப்ப்ரார்த்தனையும் அன்னதானமும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ப்ரார்த்தனை செய்தனர். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment