Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, February 3, 2015

தன்வந்திரி பீடத்தில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

       
3.2.2015 இன்று காலை 10.00 மணியளவில் பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பி வந்தவர் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள். இவர் 1874-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். தைப்பூசத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள வள்ளல் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஹோமும் கஞ்சி வழங்கும் விழாவும் நடைபெற்றது.
ஜோதியில் கலந்த இந்நாளில் வள்ளலார் கொள்கைகளான ஜீவ காருண்யம், மன அமைதி, மனித நேயம், அன்னதானம்,  மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, சாத்வீக உணவுகள், ஜாதி, இனம், சமுதாய வேறுபாடின்றி நடப்பது, எக்காரியத்திலும் பொதுநோக்கத்தோடு இருப்பது போன்ற கொள்கைகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள கார்த்திகை குமரனுக்கும் 468 சித்தர்களுக்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.· 



பௌர்ணமி தினமான இன்று 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். இந்த சுமங்கலி பூஜை தினமும் நடைபெறும் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இதில் ஏரளாமான நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment