Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 15, 2014

18ஆம் ஆண்டு குரு பூஜை, 468 சித்தர்கள் மூலிகை வேள்வி மற்றும் புத்த பூர்ணிமா சிறப்பு பூஜை.























ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 18ஆம் ஆண்டு குரு பூஜைடன், மகேஸ்வர பூஜையும், 468 சித்தர்களுக்கு மூலிகை வேள்வியும், புத்தர் பிறந்த நாளையொட்டி புத்த பூர்ணிமா விசேஷ பூஜையும் நடைபெற்றது.
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நம் முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகளை செய்யும் நாளாக கடைபிடிக்கப்படும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, நேற்று மே 14ம் தேதி, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் குருவாக போற்றி வழிபடுகின்ற அவரது பெற்றோர்களின் 18ஆம் ஆண்டு குரு பூஜையையொட்டி, பெற்றோர்களுக்காக அமைத்துள்ள ஸ்ரீபாத அஸ்தி மண்டபத்தில் ஸ்ரீ மகேஸ்வர பூஜையும், குரு பூஜையும் நடைபெற்றது.
சித்ராபௌர்ணமியை முன்னிட்டு, சிவலிங்க ரூபத்தில் சூட்சுமமுறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 468 சித்தர்களுக்கான மூலிகை வேள்வியில், உலக நலன், விவசாய நலன் மற்றும் மழை வேண்டியும் 468 குண்டங்களில் சாதுக்கள், மகான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் 468 பேர் கலந்து கொண்டனர். ஹோமத்தின் நிறைவில், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட 468 கலச நீர் கொண்டு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இமயமலை, காசி, ரிஷிகேஷ், அயோத்தி, நேபாள் போன்ற நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஏராளமான மகான்கள், சாதுக்கள் மூலிகை வேள்வியில் கலந்து கொண்டனர். குழந்தைப் பேறு இல்லாதவர்கள், குடும்பத்தில் பாசம் இல்லாமை, தம்பதியர் ஒற்றுமை, உரிய வேலை வாய்ப்பு, குடும்பத்தில் அமைதி, வழக்கு விவகாரங்கள் தீர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளும் அகல, நிவேதனப் பொருட்கள், பழங்கள், மூலிகைகள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், உணவளித்தல் உட்பட பல வகையான அர்ப்பணிப்புகளை பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே நிறைவேற்றி சாதுக்கள், மகான்கள், சித்தர்களின் பரிபூரண ஆசிகளைப் பெற்றனர். மழைவேண்டியும், நதி நீர் இணைக்கப்பட்டு நாட்டின் பஞ்சம் அகலவும், மக்கள் சுபிட்சமாக வாழவும் வேண்டி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்புடன் மகான்கள், சாதுக்களுடன் கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது.









No comments:

Post a Comment