Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, May 25, 2014

10 சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பக்தர்கள் தங்களுடைய பல்வேறு தேவைகளும் கோரிக்கைகளும் நிறைவேற வேண்டி ஒவ்வொரு ஸ்வாமிக்கும் தனித்தனி ஹோமங்கள், யாகங்கள் செய்து பலன¬டைந்து வருகின்றனர்.
இப்படி தனித்தனியாக பங்கேற்க முடியாத பக்தர்களின் கோரிக்கைகளுக்காக, பத்துவிதமான சிறப்பு ஹோமங்கள் மே 25 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த யாகப்பெருவிழாவில், எந்தவொரு காரியத்திலும் அனைத்துவிதமான தெய்வங்களின் ஆசியையும் பெற்றுத்தரும், ஸ்ரீ தன்வந்திரி விநாயகரை வேண்டி ஸ்ரீ கணபதி யாகமும், தொழில் வளர்ச்சித் தடைகளை அகற்றி, தீய சக்திகளிடமிருந்து காப்பாற்ற அஷ்டமங்கள பைரவர் மற்றும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆகியோரை வேண்டி காலபைரவர் யாகமும், குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதி கடாட்சம் அருளும் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவரை வேண்டி லஷ்மி ஹயக்ரீவர் யாகமும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணத்தடைகள் நீங்கி உரிய பருவத்தில் மணமேடை காண ஸ்வயம்வர காலாபார்வதி யாகமும், அதேபோல் ஆண்களுக்கான திருமணத்தடைகள் நீங்க கந்தர்வராஜ யாகமும், புற்று நோய், சர்க்கரைநோய், இதய நோய் போன்ற பலவித கொடுமையான நோய்களின் தீவிர பிடியிலிருப்பவர்கள் நிவாரணம் பெற ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகமும், பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளை விரைந்து அழிக்கவும், நல்லதே நடக்கவும் ஸ்ரீ சுதர்சன யாகமும், செல்வம் சேரவும், சேர்ந்த செல்வம் நிலைத்து நிற்கவும், மகாலஷ்மியின் அருள்வேண்டி ஸ்ரீ மகாலஷ்மி யாகமும், ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ ஆயுள் பலம் வேண்டி ஆயுஷ்ய ஹோமமும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் புத்திர பாக்கியம் பெற ஸ்ரீ சந்தானகோபால யாகமும் ஆகிய பத்து யாகங்கள் நடைபெற்றன.108 விதமான மூலிகைகள், வஸ்திரங்கள், பட்சணங்கள், பழங்கள், ஆகியவை யாகத்திலிடப்பட்டன.  பூர்ணாஹூதி, கலசாபிஷேகத்துடன் யாகம் முடிவடைந்தது. யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விசேஷ யாகப்பிரசாதமும், ரக்ஷையும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் வழங்கப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது.








No comments:

Post a Comment