Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, January 3, 2014

தன்வந்திரி பீடத்தில் 60 வது சனிசாந்தி பூஜை மற்றும் சனி தோஷ நிவர்த்தி ஹோமம்

சனிசாந்தி பூஜையும், சனி தோஷ நிவர்த்தி ஹோமமும் தன்வந்திரி பீடத்தில் 4.01.2014 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்த உள்ளார். இந்த ஹோமத்தில் 71/2 சனி, சனி புக்தி, சனி தசை, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற தசை, புக்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் விடுபடவும், திருமணம், குழந்தைபேறு, தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளால் ஏற்படும் தடைகள் நீங்கவும் சனி சாந்தி ஹோமம் நடைபெறுகிறது.

சனீஸ்வர பகவான் - நீதிமான்
சனீஸ்வர பகவானை பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை
ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான்சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லைஎன்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்என்று சொல்லப்படுவதும் உண்டு.

சனீஸ்வரரின் ஆதிக்கத் தன்மை
எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் தசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும், ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

சனிக்கிரகத்தினால் ஏற்படும் சில தோஷங்கள்
நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும் சனிசாந்தி ஹோமத்திலும், சனிதோஷ நிவாரண பூஜைகளிலும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

யாகத்தில் சேர்க்கவுள்ள விசேஷ திரவியங்கள்
மேலும் இந்த ஹோமத்தில் கருப்பு நிறம், நீல நிறம் வஸ்த்திரங்கள், எள்ளு, நல்லெண்ணெய், வன்னி சமித்து, வன்னி இலை, எள்ளு சாதம், இரும்பு பாத்திரங்கள், நெல்பொறி, விசேஷ மூலிகைகள், வெல்லம், பால், தயிர், தேன், எலுமிச்சை போன்றவைகள் கொண்டு நடைபெற உள்ளது.

காலச்சக்கரத்தில் கலச தீர்த்தம்
யாகத்தின் முடிவில் கலச தீர்த்தத்தை நட்சத்திர விருட்சங்களுக்கும், 12 ராசி மண்டல விருட்சங்களுக்கும், 9 நவக்கிரக விருட்சங்களுக்கும் தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள காலச்சக்கரத்தில் சனீஸ்வர கிரகத்திற்குரிய வன்னி விருட்சத்தில் சேர்த்து விருட்ச பூஜையும் நடைபெற உள்ளது.

குறிப்பு : பிரதி ஆங்கில மாதம் முதல் சனிக்கிழமைதோறும் தன்வந்திரி பீடத்தில் சனிசாந்தி ஹோமம் நடைபெற்று வருகிறது.

மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்.

Phone : 04172-230033 | Cell : 9443330203

No comments:

Post a Comment