Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, April 27, 2013

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வந்திறங்கிய பூலோக தெய்வம் ஸ்ரீ சக்தி அம்மா.


24.3.2013 ஞாயிறு அன்று பகல் 1.00 மணியளவில் ஸ்ரீ புரம் சிருஷ்டித்த ஞானகுரு ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்தார்கள். அம்மாவுக்கு கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர்கள் பூர்ண கும்ப வரவேற்பு கொடுத்தனர். அதன் பின் ஸ்ரீ சக்தி அம்மா ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு தைலபிஷேகம் செய்தார்கள். அடுத்ததாக லட்ச ஜப மகா தன்வந்திரி ஹோமத்தில் பங்கேற்று, ஆன்மிக சிறப்புரையாற்றி பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்கள். பின்னர் ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு ஸ்ரீ சக்தி அம்மாவின் கைகளினால் சிறப்பு ஆரத்தி எடுத்து கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. அதன் பின் பீடத்திலுள்ள 65 பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு ஆரத்தி மற்றும் பிரார்த்தனை செய்தார்கள்.





மேலும் ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் பீடத்தில் மதிய உணவருந்தியபின் மீண்டும் ஒவ்வொரு பரிவார தெய்வங்களையும் ப்ரத்யேகமாக பார்வையிட்டு உளம் மகிழ்ந்தார்கள். ஏறத்தாள 5 மணி நேரங்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திலேயே செலவிட்டார்கள். தன்வந்திரி குடும்பத்தினர்கள் அனைவரும் இது தங்களுக்கு கிடைத்த பெரும்பாக்கியம் என்று மகிழ்ந்தனர். மேலும் ஏரானமான பக்தர்கள் ஞானகுரு ஸ்ரீ சக்தி அம்மாவிடம் ஆசிகள் பெற்றனர் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment