Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, January 22, 2023

Thiruvonam Nakshatram - Vinayagar Danvantri Thailabishegam at sri Danvantri Arogya Peedam

 


தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வினாயகர் தன்வந்திரி,தன்வந்திரி வினாயகர் தைலாபிஷேகம்,ராஜமாதங்கி ஹோமம், பூஜை, சிறப்பு அபிஷேகம். 

 வாலாஜாபேட்டை,ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , சியாமளா நவராத்திரி விழா தொடங்கி நடைபெறுகிறது. 

சியாமளா நவராத்திரியை முன்னிட்டு இன்று 22ம்தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற 30ம்தேதி திங்கள் கிழமை முடிய தன்வந்திரி பீடத்தில் உள்ள ராஜயோகம்  தரும்  ராஜமாதங்கிக்கு  தினந்தோறும் ஹோமமும், சிறப்பு அபிஷேகமும், காலை , மாலை இரு வேளைகளிலும் பூஜைகளும் நடைபெறுகிறது.  

சியாமளா நவராத்திரியில் முதல் நாளான இன்று  ராஜமாதங்கி ஹோமமும், மஞ்சள் அபிஷேகமும் , சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

சுப காரிய தடைகள் விலக, கல்வி ஞானம் மேம்பட, கலைகளில் தேர்ச்சி, வேலை வாய்ப்பு, உயர் பதவி பெற, செயல்களில் வெற்றி ,  ராஜ யோகத்தினை பெற வேண்டி நடைபெறும் இந்த  ஹோமங்கள் மற்றும் அபிஷேக பூஜைகளில் பக்தர்கள் பங்கு பெற்று பயன் பெறலாம் என  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

 முன்னதாக இன்று 22ம்தேதி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு  தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ வினாயகர் தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கு சிறப்பு ஹோம பூஜைகளுடன்,  தைலாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு  அபிஷேகமும் நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஹோமம், அபிஷேகம் மற்றும்  பூஜையில் பங்கேற்று  ஸ்வாமி தரிசனம்செய்த பக்தர்களுக்கு  பிரசாதமும் வழங்கப்பட்டது. 








இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Saturday, January 21, 2023

Thai Amavasai Vasthra thanam, Anna thanam at Sri Danvantri Arogya Peedam

வாலாஜாபேட்டை 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 
தை அமாவாசை முன்னிட்டு நரிக்குறவர்களுக்கு 
வஸ்திர தானம், அன்னதானம் 
1000கிலோ மிளகாய் கொண்டு 
ப்ரத்யங்கிரா யாகமும் நடைபெற்றது.

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , தினந்தோறும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி  மாதாந்தோறும் அமாவாசையில் 
ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடைபெற்று வருவதும் வழக்கம் 

இந்த நிலையில் இன்று ஜனவரி 21ம்தேதி  சனிக்கிழமை  காலை  தை மாத அமாவாசை முன்னிட்டு சகலவிதமான சாப  தோஷங்கள், பித்ரு தோஷங்கள்  நீங்கிட வேண்டி  ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு (1000 கிலோ மிளகாய் வற்றல்) ஆயிரக்கணக்கான மிளகாய் தட்டுகளுடன் , சௌபாக்கிய பொருட்கள் , மூலிகைகள்   கொண்டு சிறப்பு யாகங்கள், பூஜைகள்  நடைபெற்றது.  

அதை தொடர்ந்து  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் , நரிக்குறவர் குடும்பத்தினருக்கு  வஸ்திர தானமும், அன்னதானமும் வழங்கி ஆசிர்வதித்தார். 

தை அமாவாசையை ஒட்டி நடைபெற்ற ஹோமங்கள், பூஜைகள் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமிகளை  தரிசனம் செய்து அன்னபிரசாதமும், பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர். 

நாளை 22ம்தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வருகிற 30ம்தேதி திங்கள் கிழமை  முடிய தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியுள்ள ராஜயோகம் தரும் ராஜ மாதங்கிக்கு, சியாமளா நவராத்திரி முன்னிட்டு காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.  

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.










Friday, January 20, 2023

Thai Amavasai Sri Maha Prathyankara Yagam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , நாளை                                       தை  அமாவாசை முன்னிட்டு நரிக்குறவர்களுக்கு வஸ்திர தானம், அன்னதானம். 1000கிலோ மிளகாய்  கொண்டு  ப்ரத்யங்கிரா யாகமும் நடைபெறுகிறது. 

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , தினந்தோறும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நாளை ஜனவரி 21ம்தேதி  சனிக்கிழமை  காலை  தை அமாவாசை முன்னிட்டு சகலவிதமான சாப  தோஷங்கள், பித்ரு தோஷங்கள்  நீங்கிட வேண்டி  பல்வேறு வகையான யாகங்கள்,பூஜைகள் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து  நரிக்குறவர் குடும்பங்களுக்கு   வஸ்திர தானம், அன்னதானம்  வழங்கப்படுகிறது.  மேலும் 1000 கிலோ மிளகாய் கொண்டு ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகமும் நடைபெறுகிறது. பின்னர்  பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர். 






---

Wednesday, January 18, 2023

Astrologer Aditya Guruji participates in Sanipairchi Maha Yagam at Sri Danvantri Arogya Peedam.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி மஹா யாகம் பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி பங்கேற்பு

 வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தினந்தோறும் யாகங்கள் நடைபெற்று  வருகிறது. இது தவிர  திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி , குருப்பெயர்ச்சி, ராகு கேது  பெயர்ச்சி  ஆகியவற்றின்  போதும், முக்கிய நாட்கள் மற்றும் விசேஷ நாட்களின் போதும் பல்வேறு சிறப்பு மஹா யாகங்களும் நடைபெற்று தன்வந்திரி ஆரோக்ய பீடம் யக்ஞ பூமியாக  திகழ்ந்து வருகிறது.


அந்த  வகையில் இன்று ஜனவரி 17ம்தேதி செவ்வாய்க்கிழமை, திருக்கணிதப்படி  சனி பகவான்  மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 4 இன்ச் உயரத்தில்  தங்கத்தினால் ஆன சொர்ண ( தங்க ) சனீஸ்வரராக  20 அடி அகலம், 27அடி நீளத்தில்,  10 அடி ஆழ பாதாளத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண ( தங்க) சனீஸ்வரராகவும் ,  ஒன்றரை அடி உயரத்தில்  நீலா தேவியுடன், கையில் ஊன்று கோலுடன்  ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரராகவும்   தனித்தனி சன்னதி  கொண்டு  பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் சனீஸ்வரர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் நடைபெற்றது. யாகத்தில்  பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்போதைய சனிப்பெயர்ச்சியை ஒட்டி  ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம்,  கும்பம், மீனம்   ஆகிய ராசிக்காரர்களும்,  சனி திசை மற்றும் சனி புக்தி நடப்பவர்களும், ஏழரை சனி, விரையசனி, ஜென்மசனி, பாதசனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி போன்ற தோஷங்கள் அகலவும்,  ஹோமம்,  பூஜைகளில் கலந்து கொண்டு, பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று, பரிகாரங்கள் செய்து கொண்டு சனீஸ்வரரை வழிபட்டு சென்றனர்.

 சனிப்பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி டாலர்  மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக உழவர் திருநாளான இன்று ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  பிரசாதமும்,  ஆசியும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.









Sunday, January 15, 2023

Samathuva Pongal Vizha at Sri Danvantri Arokya Peedam

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சமத்துவ பொங்கலுடன்  சமய நூல் வழங்கும் விழாதிரளான பக்தர்கள் பங்கேற்பு  வருகிற 17ம்தேதி சனிப்பெயர்ச்சி மஹா யாகம்

 வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  நித்ய ஹோமங்கள், சிறப்பு  ஹோமங்கள்  நடைபெற்று வருகிற போதிலும் அவ்வப்போது இந்து சமய விழாக்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதும் வழக்கம்.

அந்த வகையில்  தமிழர் திருநாளான  தைப்பொங்கல் , சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழாவாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று ஜனவரி 15ம் தேதி  தைப்பொங்கலை  முன்னிட்டு 18 வது ஆண்டாக  சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா நடைபெற்றது. 

விழாவை ஒட்டி 16 புதுப்பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பின்னர்  ஸ்வாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு   பகவத் கீதை உள்பட சமய  நூல்களுடன் , பொங்கல் பிரசாதமும், ஆசிகளையும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வழங்கினார்.

இது தவிர இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு  தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டகால மகா பைரவர் , ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்க்கு சிறப்பு ஹோமம் , அபிஷேகமும், ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவருக்கு வடை மாலை சாற்றியும் பூஜைகள் நடைபெற்றது. 

ஸ்ரீ லஷ்மி குபேர ஹோமத்துடன்,கணபதி, காயத்ரி ஹோமங்களும் நடைபெற்றது. 

சனிப்பெயர்ச்சி

திருக்கணிதப்படி வருகிற ஜனவரி 17ம்தேதி  அன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியில்  சனி பகவான்  மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 

சனிப்பெயர்ச்சியில், சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி ஆகியவையாக வரும் காலங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.எனவே பக்தர்கள் 

ஏழரை சனி, விரையசனி, ஜென்மசனி, பாதசனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி போன்ற தோஷங்கள் அகலவும்,சனிதிசை மற்றும் சனி புக்தி  நடைபெறும் போது  தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்து கொள்வதும் அவசியம் ஆகும்.

தற்போதைய சனிப்பெயர்ச்சியை ஒட்டி  ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம்,  கும்பம், மீனம்   ஆகிய ராசிக்காரர்களும்,  சனி திசை மற்றும் சனி புக்தி நடப்பவர்களும்  பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது. 

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 4 இன்ச் உயரத்தில்  தங்கத்தினால் ஆன சொர்ண ( தங்க ) சனீஸ்வரராக காட்சி தருகிறார்.  மேலும்  இந்த சொர்ண (தங்க)சனீஸ்வரர் 20 அடி அகலம், 27அடி நீளத்தில்,  10 அடி ஆழ பாதாளத்தில் சன்னதி கொண்டு, ஸ்ரீ பாதாள சொர்ண ( தங்க) சனீஸ்வரராக   பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்புரிந்து வருகிறார். 

இது தவிர  ஒன்றரை அடி உயரத்தில்  நீலா தேவியுடன், கையில் ஊன்று கோலுடன்  ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர்க்கும்  தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில்   பக்தர்கள் தங்களது சனி தோஷங்கள் விலகிட வேண்டி,  சனீஸ்வரர் மீது  தங்கள் கைகளாலேயே எண்ணெய் ஊற்றி  வழிபட்டு செல்வது சிறப்பு ஆகும். 

வேறு எங்கும் இல்லாத வகையில்  சிறப்புகளுடன் அமைந்துள்ள இந்த சனீஸ்வரர்களுக்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு வருகிற ஜனவரி 17ம்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிமுதல்8 மணிக்குள் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும், சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறுகிறது.

பக்தர்கள் இந்த யாகம், அபிஷேக, பூஜைகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொண்டு பயன் பெறலாம்.  சனிப்பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி டாலர்  மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் மேலும் அன்றே  உழவர் திருநாள் என்பதால் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளதாக  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

சனிப்பெயர்ச்சி மஹா யாகங்கள் மற்றும் உழவர் திருநாள் ஆகியவற்றை முன்னிட்டு  வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும், பல்வேறு தானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.









இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.


Saturday, January 14, 2023

Sani Peyarchi Maha yagam on 17.1.2023 at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                                       வருகிற 17ம்தேதி  சனிப்பெயர்ச்சி மஹா யாகம்

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தினந்தோறும் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று வருகிறது. 

இது தவிர  சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி உள்பட முக்கிய நாட்களின் போது பல்வேறு மஹா யாகங்களும்  பிரம்மாண்டமான அளவில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் வருகிற  ஜனவரி 17ம்தேதி செவ்வாய்க்கிழமை   திருக்கணிதப்படி சனி பகவான் மகர ராசியிலிருந்து ,கும்ப ராசிக்கு   சனிப்பெயர்ச்சி  ஆவதை ஒட்டி  சனிப்பெயர்ச்சி  மஹா யாகம் நடைபெறுகிறது.

சனிப்பெயர்ச்சியை ஒட்டி,  உலகில் வேறு எங்கும் இல்லாத  வகையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில் பாதாளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாதாள சொர்ண (தங்க) சனீஸ்வரருக்கும்,  நீலாதேவியுடன் , கையில் ஊன்று கோலுடன் அமைந்துள்ள  ஸ்ரீஜெயமங்கள சனீஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6மணிக்கு  சனிப்பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது.

தற்போதைய சனிப்பெயர்ச்சியை ஒட்டி  ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம்,  கும்பம், மீனம்   ஆகிய ராசிக்காரர்களும்,  சனி திசை மற்றும் சனி புக்தி நடப்பவர்களும்  பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது.

எனவே  பக்தர்கள் இந்த சனிப்பெயர்ச்சி பூஜைகள் மற்றும் மஹா யாகத்தில் பங்கேற்று பயன்பெறுமாறு பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார். 

 மேலும் நாளை 15ம்தேதி  தமிழர் திருநாளான தைப்பொங்கலை ஒட்டி  தன்வந்திரி பீடத்தில் சமத்துவ பொங்கலும், சமய நூல் வழங்கும் விழாவும், தேய்பிறை அஷ்டமியை  முன்னிட்டு  ஸ்ரீஅஷ்ட கால மஹா  பைரவருக்கு சிறப்பு ஹோமமும் , அபிஷேக  பூஜைகளும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர். 







Friday, January 13, 2023

Laxmi Kuberar boojai at sri Danvantri Arokya Peedam

 தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சமத்துவ பொங்கல். சமய நூல் வழங்கும் விழா

 வாலாஜாபேட்டை,ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  ஆண்டு தோறும் தமிழர் திருநாளான தைபொங்கல் விழா சமத்துவ பொங்கல்  சமய நூல் வழங்கும் விழாவாக நடைபெற்று  வருகிறது.

இந்த ஆண்டும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 18 ம் ஆண்டு பொங்கல் விழா சமத்துவ பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழாவாக வருகிற 15.01.2023 ஞாயிற்றுகிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த அற்புதமான விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று 13ம்தேதி வெள்ளிக்கிழமை 7 வது நாளாக  ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் , ஸ்ரீ சூக்தம் மற்றும் மகாலஷ்மி ஹோமத்துடன் நடைபெற்றது. பின்னர்   1 லட்சம் காசுகள் கொண்டு  ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஹோமம், அபிஷேகம் மற்றும்  பூஜையில் பங்கேற்று  ஸ்வாமி தரிசனம்செய்த பக்தர்களுக்கு  பிரசாதமும் வழங்கப்பட்டது. 





இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.