Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, October 22, 2022

Sri Danvantri 108 Kalasa Thirumanjanam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா  தொடக்கம் தன்வந்திரி பெருமாளுக்கு  108 கலசாபிஷேகம் 

வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா  21ம்தேதி தொடங்கி வருகிற 24ம்தேதி முடிய 4 நாட்கள் நடைபெறுகிறது.

தான்தராஸ் எனப்படும் தன்வந்திரி ஜெயந்தியைமுன்னிட்டு இன்று 22ம்தேதி  சனிக்கிழமை  ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும், மூலவர் தன்வந்திரி பகவானுக்கு 108  கலசங்களில் மூலிகைகள் கொண்டு  மகா  திருமஞ்சனம் நடைபெற்றது.

சனிசாந்தி ஹோமமும், ஸ்ரீ ஜெயமங்கள சனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பாதாள சொர்ண( தங்க ) சனீஸ்வரருக்கு  சிறப்பு பூஜையும்,  சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர்,  468 சிவலிங்க ரூப சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெற்றது. 

மருத்துவகடவுளும், ஆயுர்வேதத்தின் தந்தையும், காக்கும் கடவுளுமான ஸ்ரீதன்வந்திரி பகவான் ஜெயந்தி  முன்னிட்டு 23ம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி மஹா மந்திர ஜபமும், 500 கிலோ  பூக்கள் கொண்டு  புஷ்ப யாகமும் , சிறப்பு ஆராதனையும், தீபாவளி பண்டிகை முன்னிட்டு தன்வந்திரி லேகியம் தயார் செய்தலும்  நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற  108 கலச திருமஞ்சன  நிகழ்ச்சியில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தங்கள் கைகளால்  கலசங்களை  ஸ்வாமி அபிஷேகத்திற்கு எடுத்து வழங்கி ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.முரளிதரஸ்வாமிகளிடம் பிரசாதமும், ஆசியும் பெற்று  சென்றனர்.

  24ம்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம்  நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.









Friday, October 21, 2022

Sri Danvantri Homam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா  தொடக்கம் ஸ்ரீ ஆரோக்யலஷ்மிக்கு சிறப்பு அபிஷேகம் 

வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா  இன்று 21ம்தேதி தொடங்கி வருகிற 24ம்தேதி முடிய 4 நாட்கள் நடைபெறுகிறது.

 விழாவில் இன்று 21ம் தேதி   வெள்ளிக்கிழமை , தன்வந்திரி ஜெயந்தி விழா தொடக்கம் மற்றும்   ஐப்பசி மாத  வெள்ளிக்கிழமை முன்னிட்டும் கோ பூஜை, ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீலஷ்மி ஹோமம் ஸ்ரீ ஆரோக்ய லஷ்மிக்கு நவ கலச திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், ஸ்ரீ வினாயகர் தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள்,  பள்ளி மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து  பிரசாதமும், ஆசியும் பெற்று  சென்றனர்.

 விழாவில் நாளை 22ம் தேதி  சனிக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு  108 கலச தீர்த்த திருமஞ்சனமும், 23ம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி மஹா மந்திர ஜபமும், புஷ்ப யாகமும்  நடைபெறுகிறது. 

வருகிற 24ம்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம்  நடைபெறுகிறது.








இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Thursday, October 20, 2022

Sri Danvantri Jeyanthi At Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.தீபாவளி அன்று ஸ்ரீலஷ்மி குபேரர் யாகம் 

வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, இன்று 20ம் தேதி   வியாழக்கிழமை  ஐப்பசி மாத குருவாரத்தை ( வியாழக்கிழமை) முன்னிட்டு , தன்வந்திரி  பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகான்கள், குருமார்கள், ரிஷிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

 வீரப்பிரம்மங்காரு சீடர் சித்தையாவுடன், அகத்தியர், சேஷாத்ரி சாமிகள்,    பகவான் மகாவீரர், குழந்தையானந்த சாமிகள் ,புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், மகான் குருநானக், தங்க பாபா, சூர்ய பாபா,468 சித்தர்கள், வேதாந்த தேசிகர் உள்பட  மொத்தம் 18  பேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

முன்னதாக  மகா அவதார் பாபாஜிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து,  ஸ்வாமிகளிடம் பிரசாதமும், ஆசியும் பெற்று சென்றனர்.

 ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஜெயந்தி விழாவை  முன்னிட்டு நாளை 21ம்தேதி வெள்ளிக்கிழமை கோ பூஜை, ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லஷ்மிக்கு நவகலச திருமஞ்சனம் ஆகியவையும் ,22ம் தேதி  சனிக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு  108 கலச தீர்த்த திருமஞ்சனமும், 23ம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி மஹா மந்திர ஜபமும், புஷ்ப யாகமும்  நடைபெறுகிறது. 

வருகிற 24ம்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம்  நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.








Tuesday, October 18, 2022

Sarppa Pali, Chandi Yagam And Homams, Poojai"s at Sri Danvantri Arokya Peedam








 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சர்ப்பபலி, சண்டியாக பூஜைகள்,சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் 

வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, நேற்று 17ம்தேதி திங்கள் கிழமை மற்றும் இன்று 18ம்தேதி செவ்வாய்க்கிழமை,  அஷ்டமி மற்றும் நவமியை  முன்னிட்டு   சர்ப்பபலி,  ராகு கேது பூஜை,  நவாவர்ண பூஜை, மங்கள சண்டியாகம் , மகா காளி யாகம், மூகாம்பிகை யாகம்,லலிதாதிரிபுர சுந்தரி யாகம்,  ராஜமாதங்கி யாகம், தச மகாவித்யா பூஜை, பகவதி சேவா  போன்ற ஹோமங்கள், பூஜைகள்  நடைபெற்றது.

 முன்னதாக இன்று 18ம்தேதி  ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு சிறப்பு  ஹோமம் , அபிஷேகமும்,  ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. 

சர்ப்பபலி மற்றும்  மங்கல சண்டியாக ஹோமங்கள் மற்றும் பூஜைகளில்   உலக நலன்  வேண்டியும்,  சகல தோஷங்கள்  விலகிடவும், அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டியும்,  நீண்ட ஆயுள், ஆரோக்யம் வேண்டியும், சர்ப்ப தோஷங்கள், சர்ப்ப கோபங்கள்  நீங்கிடவும்   பிரார்த்தனை செய்யப்பட்டது.

ஹோமங்கள், பூஜைகளில்  கலந்து கொண்ட பக்தர்களுக்கு  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள்  பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.


 

Monday, October 17, 2022

Astami Bairavars Homams and Abishegams at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அஷ்டமியை முன்னிட்டு  பைரவர்களுக்கு சிறப்பு ஹோமங்கள் ,அபிஷேகங்கள்  நாளை சண்டி யாகம் நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, இன்று 17ம் தேதி  திங்கள்கிழமை , அஷ்டமியை முன்னிட்டு  தன்வந்திரி பீடத்தில்  உள்ள  அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட  பைரவர்,  குரோதண பைரவர், உன்மத்த பைரவர்,  கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும் சம்ஹார பைரவருடன் கூடிய ஸ்ரீ அஷ்ட கால  மகா பைரவர் மற்றும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என மொத்தமுள்ள 10 பைரவர்களுக்கும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. 

சிறப்பு  ஹோமங்கள் மற்றும் பூஜைகளில்   உலக நலன் மற்றும் சகல தோஷங்கள்  விலகிட, நீண்ட ஆயுள், ஆரோக்யம் வேண்டி  பிரார்த்தனை செய்யப்பட்டது. பூஜைகளில்  கலந்து கொண்ட பக்தர்களுக்கு  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள்  பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை 18ம்தேதி செவ்வாய்க்கிழமை நவாவர்ண பூஜையுடன்  மங்கள சண்டியாகம் மற்றும் பகவதி சேவா பூஜைகள் நடைபெறுகிறது. 

இந்த யாகம் மற்றும் பலி பூஜைகளில்  பாம்பு தோஷம்,  சர்ப்ப தோஷம் நீங்கிடவும்,   நட்சத்திர தோஷம், கால சர்ப்ப தோஷங்கள், சர்ப்ப  கோபங்கள்  நீங்கிடவும்   பிரார்த்தனை செய்யப்பட உள்ளது.  

யாகம்,பூஜைகளில்  பக்தர்கள் கலந்து கொண்டு  மேற்கண்ட தோஷங்கள் நீங்கிட  தெய்வங்களை வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளலாம் .







இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர். 


Sunday, October 16, 2022

Purattasi sunday Sri Danvantri Bagavan Special Poojai and Sri Sarabeswarar Homam ,Poojai at Sri Danvantri Arokya Peedam

 புரட்டாசி ஞாயிறு முன்னிட்டுமூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள்.                                                                                                                                                   நாளை சர்ப்பயாகத்துடன் சர்ப்பபலி, நாராயணபலி பூஜைகள்

வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, இன்று 16ம் தேதி  புரட்டாசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு, ஆயுள், ஆரோக்யம் வேண்டி மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மாலையில்  ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர்  ஹோமம் மற்றும் அபிஷேக பூஜை நடைபெற்று,தீபங்கள் ஏற்றப்பட்டது.

சிறப்பு பூஜையில்  உலக நலன் மற்றும் ஆயுள், ஆரோக்யம் வேண்டி  பிரார்த்தனை செய்யப்பட்டது. பூஜைகளில்  கலந்து கொண்ட பக்தர்களுக்கு  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள்  பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை 17ம்தேதி திங்கள்கிழமை சர்ப்ப யாகத்துடன்   நாராயண பலி, சர்ப்ப பலி பூஜைகள் வரை நடைபெறுகிறது.

இந்த யாகம் மற்றும் பலி பூஜைகளில்  பாம்பு தோஷம்,  சர்ப்ப தோஷம் நீங்கிடவும்,   நட்சத்திர தோஷம், கால சர்ப்ப தோஷங்கள், சர்ப்ப  கோபங்கள்  நீங்கிடவும்   பிரார்த்தனை செய்யப்பட உள்ளது.  

யாகம்,பூஜைகளில்  பக்தர்கள் கலந்து கொண்டு  மேற்கண்ட தோஷங்கள் நீங்கிட  தெய்வங்களை வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளலாம் .

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

--







Saturday, October 15, 2022

Sri 21 Feet Height Viswaroopa Asta Naga Garudar , Sri Sanjeevi Anjaneyar Homams and Abishegams at Sri Danvantri Arokya Peedam

 புரட்டாசி மாத  4 வது சனிக்கிழமை  முன்னிட்டு 21 அடி உயர விஸ்வரூப  அஷ்ட நாக கருடர் , ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர்  , ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஸ்ரீ ஜெயமங்கள சனீஸ்வரர் ஹோமங்கள், சிறப்பு அபிஷேகங்கள்

 வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, 

இன்று 15ம் தேதி  புரட்டாசி மாத 4 வது சனிக்கிழமை முன்னிட்டு, 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக  கருடர் மற்றும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் ஹோமங்கள் மற்றும்  அபிஷேகங்கள்,  காரிய சித்தி பெற ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

மாலையில் சனி சாந்தி ஹோமம், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பாதாள சொர்ண( தங்க ) சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

 ஹோமங்கள் மற்றும் பூஜைகளில்  பட்சி தோஷங்கள், சர்ப தோஷங்கள் அகல,  சுப காரிய தடைகள் விலகிட, ஆயுள் பயம் நீங்கிடவும்  பிரார்த்தனை  செய்யப்பட்டது. 

புரட்டாசி மாத 4 வது சனிக்கிழமை முன்னிட்டு  நடைபெற்ற ஹோமங்கள், அபிஷேகங்கள், பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள்  பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.