Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, November 8, 2022

Raaku Kethu Annabishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஐப்பசி மாத பௌர்ணமி  முன்னிட்டு  ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம்,குருநானக் ஜெயந்தி விழா 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று 8.11.2022 செவ்வாய்கிழமை  ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு  ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும்  வடிவமைக்கப்பட்டு அமைந்துள்ள ஸ்ரீ ராகு கேதுவிற்கு  பௌர்ணமி தோறும் அன்னதோஷங்கள் விலகவும், அன்னம் குறைவின்றி கிடைக்கவும்,ராகு கேது தோஷங்கள் விலகிடவும், அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ ராகு கேதுவிற்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் , பக்தர்களுக்கு  உணவு குழாயில்  ஏற்படும் பிரச்சனைகள்  நீங்கவும், தோஷங்கள் விலகவும்  அன்னபிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.  

 அன்னாபிஷேகத்தில் அன்னம், பருப்பு, வேகவைத்த காய்கறிகள், பொங்கல், வடை, பாயசம், வெண்பொங்கல், புளியோதரை  ஆகியவை  வைத்து அலங்காரம் செய்து , பூஜை செய்யப்பட்டு  மகா தீபாராதனை நடைபெற்றது. 

மேலும்  பௌர்ணமியை முன்னிட்டு திருமணத்தடைகள் நீங்கிட கந்தர்வராஜஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோம், நட்சத்திர தோஷங்கள் நீங்கிட  பௌர்ணமி யாகம் ஆகியவையும்,  கிரஹண பூர்த்தி செய்து சிவலிங்க ரூபத்தில்  உள்ள 468 சித்தர்களுக்கு  சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 

முன்னதாக மஹான் குருநானக்கின் 553 வது ஜெயந்தியை முன்னிட்டு  பீடத்தில் உள்ள குருநானக்கிற்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது.  பின்னர் குருதட்சிணாமூர்த்தி,  வள்ளலார், மகா பெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர்,சாய்பாபா ஆகிய குருமார்கள் சன்னதிகளிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.  

 பூஜைகளில் வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை  உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

அன்னாபிஷேகம் மற்றும்  ஹோமங்கள், பூஜைகளில்   கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்த  பக்தர்களுக்கு  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.








Monday, November 7, 2022

Ippasi Pournami Sri Maragatheeswarar Annabishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி  முன்னிட்டு  ருத்ர ஹோமம்,ஸ்ரீ மரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று 7.11.2022 திங்கள்கிழமை  ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு  ருத்ர ஹோமம்  நடைபெற்றது. 

மேலும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு  சிறப்பு அபிஷேக, பூஜைகளுடன் அன்னாபிஷேகமும் நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.  அன்னாபிஷேகத்தில்   கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்த  பக்தர்களுக்கு  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார். 

நாளை 8.11.2022 செவ்வாய்க்கிழமை  காலை பௌர்ணமியை  முன்னிட்டு  திருமணத்தடைகள்  நீக்கும் கந்தர்வராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம்,  குழந்தை பாக்யம்  வேண்டி சந்தான கோபால யாகம், ராகு கேது தோஷங்கள் நீங்கிட ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.







---

Sunday, November 6, 2022

21 Feet Viswaroopa Asta naga Garudar special Abishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர், ஸ்ரீஅஷ்ட நாக கருடர், ஸ்ரீ தன்வந்திரி ஹோமங்கள்21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கருடருக்கு சிறப்பு அபிஷேகம்







வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று 6.11.2022 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி,ஸ்ரீ அஷ்ட நாக கருடர், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்  ஹோமங்கள் நடைபெற்றது.  


 முன்னதாக  ரேவதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமத்துடன் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கும்  பால், திரவிய பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றது.  

ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்தை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கும், ஸ்ரீ வினாயகர் தன்வந்திரிக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

 ராகுகால சரபேஸ்வரர் அபிஷேகம், பூஜை
மாலை ராகுகாலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு சிறப்பு  அபிஷேகமும்,   பூஜையும் நடைபெற்றது.  பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி ஸ்ரீ சரபேஸ்வரரை  வழிபட்டனர்.

 ஹோமங்கள், பூஜைகளில்  கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்த  பக்தர்களுக்கு  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

special Thirumanchanam for Sri Kal Garuder 16.8 Feet (06.11.2022)


 

Friday, November 4, 2022

Ippasi Ekadasi Abishegam , Homam at Sri Danvantri Arokya peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஐப்பசி மாத  ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் லட்சார்ச்சனையும்  நிறைவு  பெற்றது.

 








வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  கடந்த மாதம்27ம் தேதி முதல் உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள்  நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல  அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்று  வந்தது.  

ஐஸ்வர்யங்கள் பெருகச்செய்யும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் இன்று  4.11.2022ம்தேதி வெள்ளிக்கிழமை ‘பாபாங்குசா’ ஏகாதசி என அழைக்கப்படும் ஐப்பசி மாத ஏகாதசி முன்னிட்டு   மூலவர்   தன்வந்திரி பெருமாளுக்கு,  நெல்லிப்பொடி மற்றும் பால்,மஞ்சள், சந்தனம், பன்னீர்  அபிஷேகமும், சிறப்பு புஷ்ப   அலங்காரம் செய்யப்பட்டு  பூஜைகள் நடைபெற்றது.

 முன்னதாக ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும், மூலவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. 

மேலும் கடந்த மாதம் 27ம் தேதி  தொடங்கி நடைபெற்று வந்த  லட்சார்ச்சனையும்  சிறப்புபூஜைகளுடன் நிறைவு பெற்றது. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Thursday, November 3, 2022

ippasi Yegathasi special Poojai on 4.11.2022 at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஐப்பசி மாத  ஏகாதசி முன்னிட்டு                         ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் லட்சார்ச்சனையும்  நிறைவு  பெறுகிறது

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  கடந்த மாதம்27ம் தேதி முதல் உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள்  நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல  அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் 10 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது.

ஐஸ்வர்யங்கள் பெருகச்செய்யும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் நாளை  4.11.2022ம்தேதி வெள்ளிக்கிழமை  வரும்‘பாபாங்குசா’ ஏகாதசி என அழைக்கப்படும் ஐப்பசி மாத
 ஏகாதசி முன்னிட்டு   மூலவர்   தன்வந்திரி பெருமாளுக்கு,  நெல்லிப்பொடி அபிஷேகமும், சிறப்பு புஷ்ப  அலங்காரம் செய்யப்பட்டு  பூஜைகள் நடைபெறுகிறது.

மேலும் கடந்த மாதம் 27ம் தேதி  தொடங்கி நடைபெற்று வந்த  லட்சார்ச்சனையும்  சிறப்பு ஹோமங்கள் , பூஜைகளுடன் நிறைவு பெறுகிறது,இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.


Tuesday, November 1, 2022

Magala Chandi Yagam and Special Prayer at Sri Danvantri Arokya Peedam

 



வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குஜராத் மாநில  பால விபத்தில்  காயமடைந்தவர்கள்  குணமடைய வேண்டியும், இறந்தவர்கள் முக்தி அடைய  வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை .

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஐப்பசி மாத சப்தமி திதியை முன்னிட்டு இன்று நவம்பர் மாதம் 1ம்தேதி  செவ்வாய்க்கிழமை  காலை 7.30 மணி  முதல் மதியம் 2 மணிவரை,நவக்கிரக தோஷங்கள் அகல,  நிலம், பூமி, வீடு மனை மற்றும் சொத்து தகராறு வழக்குகள்  நீங்கிட, தோஷங்கள்,திருமணத்தடை அகல,  மன அமைதி பெற்று,மன சோர்வு நீங்கி,திருஷ்டி, செய்வினை அகன்றிட,  கணவன் மனைவி ஒற்றுமை பெற, கடன் தொல்லை அகன்றிட, பதவி, படிப்பு, தொழில்,  வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள் விலகிட வேண்டி  மங்கள சண்டியாகம் நடைபெற்றது. 

மங்கள சண்டி யாகத்தை முன்னிட்டு  காலை கோ பூஜை, கணபதி சங்கல்பம், யாகசாலை பூஜைகள்,  நவதானியங்கள்,  பல்வேறு வகையான பூக்கள்,  பழங்கள், கரும்பு, இனிப்பு வகைகள்,  பூசணிக்காய்  உள்பட பல்வேறு வகையான பொருள்கள்  வைத்து நடைபெற்ற  சண்டி யாகம், பைரவர் பூஜைகள்  நடைபெற்றது. 

பின்னர் சண்டி யாகத்தை  முன்னிட்டு மகிஷாசுர மர்த்தினிக்கு 13 வகையான கலசங்களில்  வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்கள் மற்றும்  பால், சந்தனம், மஞ்சள்,  பன்னீர் , திரவிய பொடி  ஆகியவை  கொண்டு  சிறப்பு அபிஷேக, ஆராதனையும், அதை தொடர்ந்து ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கு சிறப்பு அலங்காரத்துடன்  புஷ்பாஞ்சலியும், தீபசேவையும் நடைபெற்றது. 

சண்டி யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

சிறப்பு பிரார்த்தனை 

முன்னதாக   சண்டியாகத்தில் , குஜராத் மாநிலம் மோர்பியில்  நடைபெற்ற கேபிள் பால  விபத்தில்  காயமடைந்த  முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் விரைவில் பூரண குணமடைய  வேண்டியும்,  விபத்தில் இறந்தவர்கள் முக்தி அடைய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இந்த சிறப்பு பிரார்த்தனையில்  பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.