தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாசி அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி திருஷ்டி துர்கை யாகம்--
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் மாசி அமாவாசையை முன்னிட்டு 20.02.2023 திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை கண் திருஷ்டி நீங்கவும், துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், உயர் பதவி கிடைக்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபாரம் மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்யம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடு, வாசல், நன்மக்கள் அமையவும் காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும், சரபசூலினி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல், பழங்கள், புஷ்பங்கள், பூசணிக்காய் மற்றும் பல்வேறு மூலிகைகளைக் கொண்டு திருஷ்டி யாகத்துடன் விஷேச பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற்று சென்றனர்.
No comments:
Post a Comment