தைப்பூசத்தை முன்னிட்டு பௌர்ணமி யாகங்கள்
வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தினந்தோறும் ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களும், மாதாந்திர அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, பிரதோஷ நாட்களில் பல்வேறு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
மாதாந்திர பௌர்ணமி நாட்களில் ஆண், பெண், பித்ரு தோஷம், கலத்திர தோஷம், நவக்கிரக தோஷம், ஜாதக ரீதியான தோஷங்கள், பித்ரு சாபம் நீங்கி விரைவில் திருமண பாக்கியம் பெற கந்தர்வ ராஜஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமங்களும் , தம்பதிகள் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகமும், ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் நடைபெற்று வருவது வழக்கம்.
அதன்படி வருகிற 5ம்தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சந்தான கோபால யாகம், சகல தேவதா ஹோமமும், சர்வதேவதா பூஜையும் , ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. மேலும் அன்று தைப்பூசத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள வள்ளலாருக்கும், சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேக, பூஜைகளும், சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.
முன்னதாக காலை கோ பூஜையுடன், காலச்சக்கர பூஜை, கலச பூஜை ஆகியவையும் பின்னர் லோக ஷேம ஆரத்தியுடன் ஹோமமும், பூர்ணாஹதி மற்றும் கலசாபிஷேகமும் நடைபெறுகிறது.
முன்னதாக இன்று பிப்ரவரி 2ம்தேதி வியாழக்கிழமை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீமகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
---------------------------
No comments:
Post a Comment