வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தைமாத பிரதோஷம் சிறப்பு அபிஷேகம், பூஜைகள்
வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தினந்தோறும் ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களும், மாதாந்திர அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, பிரதோஷ நாட்களில் பல்வேறு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று 3ம்தேதி வெள்ளிக்கிழமை தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு , தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நந்தி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீமரகதலிங்கேஸ்வரர்க்கும் சிவலிங்க வடிவில் உள்ள 468 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகளும்,சித்தர்களின் ஞான குருவான ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பிரதோஷ பூஜை மற்றும் அபிஷேகங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து, பிரசாதங்களும், பீடாதிபதி டாக்டர். முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.
முன்னதாக இன்று பிப்ரவரி 3ம்தேதி வெள்ளிக்கிழமை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீமகாலட்சுமி ஹோமங்கள், சந்தான கோபால யாகம் மற்றும் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment