வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 18.02.2023 சனிக்கிழமை தேய்பிறை பிரதோசம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்களுக்கு பூஜை மேலும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரர் மற்றும் பஞ்சலிங்க ஜலகண்டேஸ்வரருக்கு விஷேச ஹோமம் மற்றும் அபிஷேகம் மூன்று கால பூஜையாக நடைபெற்றது.
இறைவனிடம் வைக்கப்பட்ட எப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனைக்கும், வேண்டுகோளுக்கும், கோரிக்கைக்கும் நம் வழிபாட்டு முறையில் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு. அதன் பலன் நமக்குக் கிடைத்தே தீரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும்.
இந்த நம்பிக்கைத் தாரக மந்திரத்தை முன்வைத்துதான் வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினமும் எண்ணற்ற ஹோமங்களும் வழிபாடுகளும் நடந்து வருகின்றன. அதைப் போலவே இந்த நம்பிக்கையைத் தங்கள் மனதில் சுமந்துதான் வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்குத் தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தங்களுக்கு என்ன பிரார்த்தனையோ, அதை முன்வைத்து ஹோமம் செய்கிறார்கள்.
நம் பிரார்த்தனை மூலம் சம்பந்தப்பட்ட தேவதையை நாம் குளிர வைக்க வேண்டும். நமக்கு அனுக்ரஹம் செய்ய வைக்க வேண்டும். இதுதான் ஹோமம் செய்வதன் முக்கிய குறிக்கோள் என்பதை உணர வேண்டும்.
மழை வேண்டியும், விவசாயிகளின் நலம் வேண்டியும், பஞ்ச பூதங்களின் ஆசி வேண்டியும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்னைகள், குடும்ப நலன், நோயில்லா வாழ்க்கை, செல்வ வளம், கல்வி, திருமணம், குழந்தைப் பேறு, உத்தியோகம் இப்படிப்பட்ட அனைத்துக்கும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மேற்கண்ட ஹோமமும் பூஜையும் அபிஷேகமும் நடைபெற்றது.
No comments:
Post a Comment