வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பத்து பைரவர் யாகங்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு அஷ்ட பைரவ யாகத்துடன் மகா காலபைரவர் யாகம் நடைபெற்றது.
பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள்:
வர வேண்டிய பணம் வரவும் தர வேண்டிய பணத்தைத் திருப்பி தரவும் கடன்களை தீர்க்கவும்.
நோயினால் உண்டாகும் உபாதைகள் தீரவும், வலிகள், வேதனைகள் நீங்கவும். சனிக்கிரகத்தின் தாக்கம் குறையவும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி தோஷங்கள் விலகவும்.
உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன்,
பதவி உயர்வு பெறவும், விவசாயம், வியாபாரம் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு
வருமானம் கூடவும். அரசியலில் வெற்றிகள் பெறவும்.
கர்மவினைகள் தீரவும்.குடும்பத்தில் சர்வ மங்களமும் சகல செளபாக்கியங்கள் பெறவும்,
திருமணம் , குழந்தை பேறு கைக்கூடவும் அஷ்ட பைரவ யாகத்துடன் மகா காலபைரவர் யாகம் நடைபெற்றது பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள்:
அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கை முன்னிட்டு
மேற்கண்ட யாகங்களில் பொது மக்கள் நேரில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment