வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பத்து பைரவர் யாகங்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சொர்ண பைரவர் யாகத்துடன் சிறப்பு அபிஷேகமும் மாலை 5.00 மணிக்கு அஷ்ட பைரவ யாகத்துடன் மகா காலபைரவர் யாகம் நடைபெற உள்ளது.
பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள்:
வர வேண்டிய பணம் வரவும் தர வேண்டிய பணத்தைத் திருப்பி தரவும் கடன்களை தீர்க்கவும். நோயினால் உண்டாகும் உபாதைகள் தீரவும், வலிகள், வேதனைகள் நீங்கவும். சனிக்கிரகத்தின் தாக்கம் குறையவும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி தோஷங்கள் விலகவும்.உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன், பதவி உயர்வு பெறவும், விவசாயம், வியாபாரம் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடவும். அரசியலில் வெற்றிகள் பெறவும். கர்மவினைகள் தீரவும்.குடும்பத்தில் சர்வ மங்களமும் சகல செளபாக்கியங்கள் பெறவும், திருமணம் , குழந்தை பேறு கைக்கூடவும் அஷ்ட பைரவ யாகத்துடன் மகா காலபைரவர் யாகம் நடைபெற உள்ளது பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள்.
10 பைரவர்கள் அமர்ந்து அருள்பாவிக்கும் ஒரே ஸ்தலம்:
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள் இங்கு ஒரே கல்லில் நான்கு அடி உயரத்தில் நாய் வாகனத்துடன் ஆதார பீடத்தில் 1. அசிதாங்க பைரவர் அன்னம் வாகனத்துடனும் 2. ருரு பைரவர் ரிஷபம் வாகனத்துடனும் 3. சண்ட பைரவர் மயில் வாகனத்துடனும் 4. குரோதன பைரவர் கருடன் வாகனத்துடனும் 5. உன்மத்த பைரவர் குதிரை வாகனத்துடனும் 6. கபால பைரவர் யானை வாகனத்துடனும் 7. பீஷண பைரவர் சிம்மம் வாகனத்துடனும் 8. சம்ஹார பைரவர் நாய் வாகனத்துடனும் என அஷ்ட பைரவர்களுடன் சிரித்த முகத்துடன் அருள்ப்பாவிக்கிறார் மேலும் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண அகார்ஷ்ண பைரவர் பணம் தரும் பைரவராக இங்கே வீற்றிருந்து அருள்பாவிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் வேறெங்கும் காணாத வகையில் 10 பைரவர்கள் அமர்ந்து அருள்பாவிக்கும் ஒரே ஸ்தலம் என்ற சிறப்பு தன்வந்திரி பீடத்துக்கு உண்டு என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
பைரவரின் சிறப்பு:
பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். காசி கோவிலில் பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார். எண்ணற்ற மக்கள் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கவுரவக் குறைவை அடைந்தார். சனி அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள் பாவிக்கிறார்.
பயத்தை நீக்கும் பைரவர் அடியார்களின் பாபத்தை நீக்குபவர் ஆவார். இவர் எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடி வருபவர்களுக்கு நன்மை செய்பவர் மேலும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்பவர். தகுந்த பூஜைகள் செய்து வந்தால் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலும். சந்தோஷத்துடன் உடனே நன்மை அருள்பவர். நீலநிற மேனியரான பைரவர் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை ஏந்திய திருக்கரங்களுடன் மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் நிர்வாண கோலத்துடன் காட்சியளித்து நம்மை காத்து வருகிறார் நாய் வாகனத்துடன் காவல் தெய்வமாக காவல் பைரவர் நம்மை காத்து வருகிறார். இவரே அஷ்ட பைரவராகவும் 64 பைரவராகவும் வெவ்வேறு வாகனங்களுடன் அனுக்கிரகம் செய்கிறார் .
தேய்பிறை அஷ்டமி யாகத்தின் சிறப்பு :
ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண அகார்ஷ்ண பைரவர் ஹோமத்தின் சிறப்பு தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வ வளங்களை வாரி வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று நடைபெறும் பைரவர் யாகத்தில் பங்கேற்று இவரை வணங்குவது மிகவும் சிறப்பு அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருசேர கிடைக்கும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும். மேலும் ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீர்ந்து நன்மை பெறலாம்.
அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கை முன்னிட்டு மேற்கண்ட யாகங்களில் பொது மக்கள் நேரில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment