வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பத்து பைரவர் யாகங்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சொர்ண பைரவர் யாகத்துடன் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமி யாகத்தின் சிறப்பு :
ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண அகார்ஷ்ண
பைரவர் ஹோமத்தின் சிறப்பு தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வ வளங்களை வாரி வழங்குவதற்கும்
நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது. இழந்த
செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்
செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று நடைபெறும் பைரவர் யாகத்தில் பங்கேற்று
இவரை வணங்குவது மிகவும் சிறப்பு அஷ்ட லட்சுமிகளும்
அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற
எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின்
நம்பிக்கை.அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும்
ஒருசேர கிடைக்கும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர்
வழிபாடு ஆகும். மேலும் ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள்
தீர்ந்து நன்மை பெறலாம்.
அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கை முன்னிட்டு
பொது மக்கள் நேரில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை - 632513, இராணிப்பேட்டை மாவட்டம்,
E-Mail :
danvantripeedam@gmail.com, www.danvantritemple.org
Ph:04172-230033,
230274, 9443330203
No comments:
Post a Comment