வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 100 நாட்கள்
ஸ்ரீ
தன்வந்திரி கோடி நாம ஜப யாகம்
ஸ்ரீ
தன்வந்திரி ஹோமம் – அபிஷேகம்
மஹா
மிருத்யுஞ்சய ஹோமம் – ராகு கேது ப்ரீதி ஹோமம் – சத்ரு சம்ஹார ஹோமம் சிறப்பாக நடைபெற
இன்று
23.06.2020 செவ்வாய்க்கிழமை
அன்னபூரணி
ஹோமம் – லக்ஷ்மி குபேர ஹோமம் – அபிஷேகம் - ஆராதனைகள் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ
கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன்
கருதியும், கொரோணா வைரஸின் அச்சம் குறையவும், சூரிய கிரகணத்தின் தாக்கம் குறையவும்,
உடல் மற்றும் மன ரீதியான நோய்கள் அகலவும், சகல சௌபாக்யங்கள் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி
சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி வருகிற 24.06.2020 புதன்கிழமை முதல்
01.10.2020 வியாழக்கிழமை வரை ஸ்ரீ தன்வந்திரி
கோடி நாம ஜப யாக்ஞம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், மஹா மிருத்யுஞ்சய ஹோமம், ராகு கேது ப்ரீதி
ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு இந்த 100 நாள் யாகங்கள் தங்குதடையின்றி
சிறப்பாக நடைபெறவும் அன்ன தோஷம் விலகவும், குறைவில்லா அன்னம் கிடைக்கவும், விவசாயம்
செழிக்கவும், மேலும் பல நன்மைகளை பெற பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு
சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகம், ஆராதனைகள், இன்று 23.06.2020 செவ்வாய்க்கிழமை காலை
10.00 மணியளவில் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் தன தானிய விருத்தி பெறவும்,
பண கஷ்டங்கள் அகலவும், சகல ஐஸ்வர்யங்கள் பெறவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ
லக்ஷ்மி குபேரரை வேண்டி ஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு விசேஷ
அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மேலும் நாளை 24.06.2020 புதன்கிழமை காலை 10.00 மணி முதல்
100 நட்கள் தொடர்ந்து நடைபெறும் ஸ்ரீ தன்வந்திரி
கோடி நாம ஜப யாக்ஞம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், மஹா மிருத்யுஞ்சய ஹோமம், ராகு கேது ப்ரீதி
ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் துவங்க உள்ளது.
தொடர்ந்து மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை தன தானிய விருத்தி
பெறவும், பண கஷ்டங்கள் அகலவும், சகல ஐஸ்வர்யங்கள் பெறவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள
ஸ்ரீ லக்ஷ்மி குபேரரை வேண்டி ஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு
விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் மூலமாகவோ
தொலைபேசி மூலமாகவே சங்கல்பத்தை தெரிவித்து குடும்பத்தினருடன் அவரவர் இல்லங்களில் இருந்து
பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக பங்கேற்க யாரூக்கும் அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632513.
Ph : 04172 230033 / 9443330203
Email : danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment