வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மஹாசிவராத்திரி சிறப்பு பூஜைகள்.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேடை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் மஹா
சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 21.02.2020 வெள்ளிக்கிழமை
ஸ்ரீ
மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு காலை 10.00 மணி முதல்
12.00
மணி
வரை சிவபஞ்சாக்ஷர யாகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலை 4.30
மணியளவில்
பீடத்தில் சிவலிங்க ரூபமாக பிரதிஷ்டை செய்துள்ள 468 சித்தர்களுக்கு
சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
சிவ
பஞ்சாக்ஷர ஹோமத்தை செய்வதால் உங்கள் வீடுகளில் இருக்கின்ற எதிர்மறை சக்திகள்
அனைத்தும் நீங்கும், உங்கள் குடும்பத்தில் எதிரிகளால்
ஏற்படும் தொல்லைகள் நீங்கும், உங்கள் வீட்டை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள்
நீங்கி, தரித்திரமும் வறுமை நிலையும் உங்களை என்றும் அண்டாமல்
காக்கும், தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல்
தடுத்து லாபங்களை பன்மடங்கு பெருக்கும், செல்வம் பெருகும், புதியசொத்துக்களின்
சேர்க்கை உண்டாகும், வாழ்வில் எப்போதும் கடன் வாங்காத ஒரு நிலையை ஏற்படுத்தும்.
இத்தகைய
சிறப்புகள் வாய்ந்த யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள்
பெற்று நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள்
அபிஷேக திரவியங்கள், மூலிகைகள், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், பூஜை பொருட்கள்,
வஸ்திரங்கள் அளித்து குடும்பத்தினருடன் இறைகைங்கரியத்தில் ஈடுபடலாம். இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment