வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்தொடர் மங்கள சண்டி யாகம்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி நாளை 22.02.2020 சனிக்கிழமை
முதல் 24.02.2020 திங்கள்கிழமை வரை
மற்றும் வருகிற 06.03.2020 வெள்ளிக்கிழமை
முதல் 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை
வரை மங்கள சண்டி யாகம் நடைபெற உள்ளது.
மஹா
சண்டி யாகம் :
ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் தன்னுள்ளே
அடக்கி உலகத்தை படைத்தவளே அன்னை ஆதிபராசக்தி. அழிவுப்பாதையை நோக்கி
சென்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தை காப்பாற்றி, இயற்கையின் சீற்றத்தை
தனித்து, மழை பெய்து, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும்,
அமைதியோடும் என்றென்றும் வாழ அன்னை ஆதிபராசக்தியை குறித்து நட்த்தப்படும்
யாகமே சண்டி மஹா யகமாகும்.
நவக்கிரக
தோஷங்கள்,
நிலம், பூமி, வீடு மனை மற்றும்
சொத்து தகராறு, வழக்குகள், பூர்வஜென்ம தோஷம்,
கன்யா தோஷம், பித்ரு தோஷம் இதனால் ஏற்படும் திருமணத்தடை,
மன அமைதி குறைவு, மனசோர்வு, திருஷ்டி, செய்வினை, துஷ்ட சக்தி
தோஷங்கள் மற்றும் நாக தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகள், குழந்தயின்மை,
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, கடன் தொல்லை,
எவ்வளவு உழைத்தும் பலன் இல்லாமை, பதவி உயர்வு,
குழந்தைகள் படிப்பு, உத்தியோகம், தொழில்,
வியாபாரம் இவையனைத்திலும் ஏற்படும் தடைகளுக்கு இந்த மஹா யக்ஞத்தில் கலந்து
கொண்டு பிரார்த்தனை செய்து தடைகள் நீங்கி சண்டிகா தேவியின் அருள் பெற்று சகல ஐஸ்வர்யங்களுடன்,
ஆரோக்யத்துடன் வாழ பிரார்த்திக்கின்றோம்.
இதில்
பங்கேற்க விரும்பும் பக்தர்கள் மூலிகைகள், நெய், சமித்துகள், புஷ்பங்கள், சௌபாக்ய
பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், மளிகை பொருட்கள், போன்றவை
அளித்து குடும்பத்தினருடன் இறை கைங்கரியத்தில் ஈடுபடலாம். இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment