வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மங்கள சண்டி யாகம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று
24.02.2020 திங்கள்கிழமை காலை 9.00 மணி
முதல் மதியம் 2.00 மணி வரை மங்கள சண்டி யாகமும்
மஹா பூர்ணாஹுதியும் நடைபெற்றது.
இதில்
மங்கள இசையுடன் கோ பூஜை, கணபதி பூஜை, கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், 64 யோகினி பைரவர் பலி பூஜை, யாகசாலை
பூஜை, கலச ஆவாஹனம், பாராயணம், கன்யா
பூஜை, பிரஹ்ம்மசாரி பூஜை, தம்பதி பூஜை, சுஹாசினி பூஜை நடைபெற்றது. இந்த யாகத்தில் நெய், தேன், மூலிகைகள்,
பூசணிக்காய், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள்,
பட்டு வஸ்திரங்கள், மாங்கல்யம், கொலுசு, மிட்டி போன்ற சௌபாக்ய பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மங்கள சண்டி யாகம் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர
மர்த்தினிக்கு பால், தயிர், மஞ்சள்,
சந்தனம், திரவியப்பொடி போன்ற பஞ்ச திரவியாபிஷேகத்துடன்
கலசாபிஷேகம் நடைபெற்றது.
இதில்
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். மேலும் மாசி மகத்தை
முன்னிட்டு வருகிற 06.03.2020 வெள்ளிக்கிழமை
முதல்
08.03.2020 ஞாயிற்றுகிழமை
வரை மஹா சண்டி யாகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment