Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, June 23, 2020

Annapoorani Homam - Lakshmi Kubera Homam


வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 100 நாட்கள்
ஸ்ரீ தன்வந்திரி கோடி நாம ஜப யாகம்
ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் – அபிஷேகம்
மஹா மிருத்யுஞ்சய ஹோமம் – ராகு கேது ப்ரீதி ஹோமம் – சத்ரு சம்ஹார ஹோமம் சிறப்பாக நடைபெற
இன்று 23.06.2020 செவ்வாய்க்கிழமை
அன்னபூரணி ஹோமம் – லக்ஷ்மி குபேர ஹோமம் – அபிஷேகம் - ஆராதனைகள் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோணா வைரஸின் அச்சம் குறையவும், சூரிய கிரகணத்தின் தாக்கம் குறையவும், உடல் மற்றும் மன ரீதியான நோய்கள் அகலவும், சகல சௌபாக்யங்கள் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி வருகிற 24.06.2020 புதன்கிழமை முதல் 01.10.2020 வியாழக்கிழமை வரை ஸ்ரீ தன்வந்திரி கோடி நாம ஜப யாக்ஞம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், மஹா மிருத்யுஞ்சய ஹோமம், ராகு கேது ப்ரீதி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இந்த 100 நாள் யாகங்கள் தங்குதடையின்றி சிறப்பாக நடைபெறவும் அன்ன தோஷம் விலகவும், குறைவில்லா அன்னம் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும், மேலும் பல நன்மைகளை பெற பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகம், ஆராதனைகள், இன்று 23.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் தன தானிய விருத்தி பெறவும், பண கஷ்டங்கள் அகலவும், சகல ஐஸ்வர்யங்கள் பெறவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி குபேரரை வேண்டி ஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மேலும் நாளை 24.06.2020 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 100 நட்கள் தொடர்ந்து நடைபெறும் ஸ்ரீ தன்வந்திரி கோடி நாம ஜப யாக்ஞம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், மஹா மிருத்யுஞ்சய ஹோமம், ராகு கேது ப்ரீதி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் துவங்க உள்ளது.

தொடர்ந்து மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை தன தானிய விருத்தி பெறவும், பண கஷ்டங்கள் அகலவும், சகல ஐஸ்வர்யங்கள் பெறவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி குபேரரை வேண்டி ஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவே சங்கல்பத்தை தெரிவித்து குடும்பத்தினருடன் அவரவர் இல்லங்களில் இருந்து பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக பங்கேற்க யாரூக்கும் அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632513.
Ph : 04172 230033 / 9443330203
Email : danvantripeedam@gmail.com








Sunday, June 14, 2020

Maha Ganapathy Homam on 17.06.2020


வாலாஜா தன்வந்திரி பீடத்தில்
ஜூன் 17ல் மகா கணபதி ஹோமம்

ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் வருகிற 24.06.2020 முதல் 1.10.2020  வரை 100 நாட்கள் உலக நலன் கருதி தன்வந்திரி கோடி நாம அர்ச்சனை - தன்வந்திரி ஹோமம் திருமஞ்சனம் நடைபெறுவதை முன்னிட்டு 17.06.2020 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மேற்கண்ட ஹோமங்கள் தங்க தடையின்றி நடைபெறவும், கர்ம வினைகள், ஊர் வினைகள் அகலவும், சகல காரியங்களில் வெற்றி பெறவும் மகா கணபதி ஹோமமும், தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகமும் நடைபெற உள்ளது. வீட்டில் இருந்தவாரே சங்கல்பத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்து பலன் பெறலாம்.

அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கை முன்னிட்டு  மேற்கண்ட பூஜைகளிலும் ஹோமங்களிலும் பொது மக்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை – 632513, இராணிப்பேட்டை மாவட்டம்,
Ph:04172-230033, 230274, 9443330203

Account Details:
         Google Pay : "danvantripeedam@oksbi"
Name : Sri Muralidhara Swamigal, Bank Name : State Bank of India
Savings Account Number : 10917462439  Walajapet Branch : Bank Code: 0775, IFC: SBIN0000775




1st Year Ceremony of Sri Pathala Sorna Saneeswarar and Sri Lakshmi Varahar...



இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ பாதாள சொர்ண சனிஸ்வரருக்கும், ஸ்ரீ லட்சுமி வராஹருக்கும் முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று 14.06.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் 1008 சங்காபிஷேகமும், சிறப்பு ஹோம பூஜைகளும் நடைபெற்றது.

ஆலய அர்ச்சர்களை கொண்டு நடைபெறும் மேற்கண்ட பூஜைகளில் தமிழக அரசின் பொது ஊரடங்கு உத்திரவு முன்னிட்டு பொது மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை – 632513, இராணிப்பேட்டை மாவட்டம்,
Ph:04172-230033, 230274, 9443330203











 






Theipirai Ashtami...


வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பத்து பைரவர் யாகங்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு அஷ்ட பைரவ யாகத்துடன் மகா காலபைரவர் யாகம் நடைபெற்றது.

பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள்:
வர வேண்டிய பணம் வரவும்  தர வேண்டிய பணத்தைத் திருப்பி தரவும் கடன்களை தீர்க்கவும். நோயினால் உண்டாகும் உபாதைகள் தீரவும், வலிகள், வேதனைகள் நீங்கவும். சனிக்கிரகத்தின்  தாக்கம் குறையவும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி தோஷங்கள் விலகவும்.  உத்தியோகத்தில்  சம்பள உயர்வுடன், பதவி உயர்வு பெறவும், விவசாயம், வியாபாரம் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடவும்.  அரசியலில் வெற்றிகள் பெறவும். கர்மவினைகள் தீரவும்.குடும்பத்தில் சர்வ மங்களமும் சகல செளபாக்கியங்கள் பெறவும், திருமணம் , குழந்தை பேறு கைக்கூடவும் அஷ்ட பைரவ யாகத்துடன் மகா காலபைரவர் யாகம் நடைபெற்றது  பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள்:

அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கை முன்னிட்டு மேற்கண்ட யாகங்களில் பொது மக்கள் நேரில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். 










Saturday, June 13, 2020


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண சனிஸ்வரருக்கு முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் சென்ற வருடம் 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் ஸ்ரீ சொர்ண சனீஸ்வர ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இப்பிரதிஷ்டையை முன்னிட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவின் 
பல்வேறு பகுதிகளிலுள்ள பிரசித்தி பெற்ற சனி பகவான் ஆலயங்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நேரில் சென்று சனி பகவான் யந்திரத்தை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்து வந்தார்.
ஒரு மனிதனை அவரவர் பூர்வபுண்ணியத்திற்கு தகுந்தவாறு வாழ்க்கை பாதையை கொண்டு செல்பவர்கள் நவக்கிரகங்களே. அந்த நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படை மட்டுமின்றி பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர் இவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியாது. சனி பகவான் ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரனாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர் இவரே. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக கோயில்களில் நவக்கிரகங்களுடன் சேர்ந்திரிப்பார். ஒரு சில பரிகாரக் கோயில்களில் தனி சன்னதிகளில் மூல மூர்த்தியாக காட்சி தருகிறார். அதைப் போலவே வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் 13 படிகள் கொண்டு பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வர பகவான் தனி ஆலயம் அமைத்து கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அனுக்கிரகம் செய்து வருகிறார். சனி பகவான் யந்திரத்தை சொர்ண சனீஸ்வர பகவானின் ஆதார பீடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால். பல்வேறு க்ஷேத்திரங்களில் உள்ள இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று தன்வந்திரி க்ஷேத்திரத்தில் சொர்ண சனிஸ்வரன் அமைந்துள்ளதால் இப்பீடத்திற்கு 27 நக்ஷத்திரக்காரர்களும் வந்து பிரார்த்தனை செய்யும் சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும், ஆரோக்ய, ஐஸ்வர்ய பீடமாகவும் அமைந்துள்ளது.

தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். இவரை வணங்குவதால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தம சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி, மற்றும் சனி தசை, சனி புக்தி ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும். ஆயுள் கண்டம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்கவும், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் தீரவும், திருமணத்தடை நீங்கவும் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சனி சாந்தி ஹோமத்தில் பக்தர்கள் பங்கேற்று சொர்ண சனீஸ்வரரை வழிபட்டு பலன் பெற்று வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ பாதாள சொர்ண சனிஸ்வரருக்கு நாளை 14.06.2020 ஞாயிற்றுக்கிழமை முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மகா மிருத்ஞசய ஹோமமும், சனி சாந்தி ஹோமமும், 1008 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. ஆலய அர்ச்சர்களை கொண்டு நடைபெறும் மேற்கண்ட பூஜைகளில் தமிழக அரசின் பொது ஊரடங்கு உத்திரவு முன்னிட்டு பொது மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை – 632513, இராணிப்பேட்டை மாவட்டம்,
Ph:04172-230033, 230274, 9443330203

 





Theipirai Ashtami...


வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பத்து பைரவர் யாகங்கள்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சொர்ண பைரவர் யாகத்துடன் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமி யாகத்தின் சிறப்பு :

ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண அகார்ஷ்ண பைரவர் ஹோமத்தின் சிறப்பு தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வ வளங்களை வாரி வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது. இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று நடைபெறும் பைரவர் யாகத்தில் பங்கேற்று இவரை வணங்குவது மிகவும் சிறப்பு  அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருசேர கிடைக்கும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும். மேலும் ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீர்ந்து நன்மை பெறலாம்.
அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கை முன்னிட்டு பொது மக்கள் நேரில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை - 632513, இராணிப்பேட்டை மாவட்டம்,
E-Mail : danvantripeedam@gmail.com, www.danvantritemple.org
Ph:04172-230033, 230274, 9443330203













Sri Gayathri Homam...


Gayathri Homam at Sri Danvantri Arogya Peedam on 12.06.2020

Sri Danvantri Peedam, Walajapet conducted Sri Gayathri  Homam on today  12.06.2020 Friday with the blessings of our beloved guruji “ Yagnasri Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal. Goddess  Gayathri is the mother of all the vedas. Gayathri  Devi pervades everywhere. Gayathri consists of three deities, Gayathri, Savithri, and Saraswathi. Of these, the first one is master of the sense, the second is the teacher of truth, and the third is the master of speech. Hence it is a Trinity of the senses, the mind, and speech. She is the Param Sakti, who is the sustaining Force that animates all life. She is the universal mother and the power of god manifestation. She is depicted as sitting on a lotus with the five faces . Because of this she also known as. Punchamukh. Her five faces epresenting the pancha pranas which is the five basic energy or life forms and the pancha thathwas and She has ten hands holding the various ayudas (weapons).

Gayathri Mantra is a sacred mantra comprising of praise, meditation, and prayer. At First the Divine is praised, then It is meditated upon in reverence, and finally an appeal is made to the Divine to awaken and strengthen the intellect, the discriminating faculty of man. Gayathri is a Mantra devi, the manifestation of all the beeja mantras. Similarly beeja mantras of different Gods, when recited together gives humans lot of positive energy and blessings of all the Gods. They are the vibrations, and represent the “call” of the soul. The presiding deities of the Gayathri mantra are Gayathri, Savithri and Saraswathi.

Gayathri Homam is an intensive way of chanting Gayathri mantra and initiates one to form a close bond with Goddess Gayathri Devi by creating a conscious flow of subtle energy within one’s body. This will empower various aspects of one’s personality – intelligence, beauty, speech, health, etc., which will naturally reflect in one’s actions and growth.

Gayathri Homam assists to ward off all misery, protect one from harm, bestow one with an incomparable inner strength which can only be experienced and cannot be explained, illuminate one’s intellect and gain of peace of mind. Besides, the effect of bad karma is also reduced and good karma facilitated.
It should be noted that apart from the personal benefit you gain, when one chants Gayathri, one’s family and everybody else also gain. Gayathri is the spirit behind the slogan of Sanatana Dharma “LokaSamastha Sukhino Bhomamitu” meaning let the all the people of this world be happy.

For More Details Contact:
Sri Danvantri Arogya Peedam,
Anandhalai Madhura, Kilpudupet,
Walajapet-632513, Ranipet Dt.
Ph:04172-230033, 230274, 9443330203