வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஸஹஸ்ர (1008) கலசாபிஷேகம் – ஸஹஸ்ர நாம அர்ச்சனைநடைபெற்றது.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று
15.12.2019 ஞாயிற்றுக்கிழமை
காலை
10.00 மணி முதல்
1.00 மணி வரை
பிணி
தீர்க்கும் தன்வந்திரி பெருமாளுக்கு 16 ஆம் ஆண்டு ஸஹஸ்ர
(1008) கலசாபிஷேகத்துடன் ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.
இதில் கோ பூஜை,
மங்கள இசை, வேதபாராயணம், மஹா தன்வந்திரி ஹோமம் நடைபெற்று கலச புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து விசேஷ மூலிகைகள், வாசனாதி திரவியங்கள், புனித தீர்த்தங்களுடன் 1008 கலசங்கள்
அமைக்கப்பட்டு, அக்கலசங்களுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெற்று 1008 பக்தர்கள் ஊர்வலமாக
கொண்டு வந்து, பால், மஞ்சள், சந்தனம், நெல்லிப்பொடி, பன்னீர் போன்ற திரவியங்களால் உலக
மக்களின் உடல் பிணி உள்ளது பிணி நீங்க ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் திருக்கரங்களால் திருமஞ்சனம் நடைபெற்று ஸஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து
ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து
சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment