ஆறு கிரக சேர்க்கையினால் ஏற்படும் தோஷங்கள் விலகவும்சூரிய கிரகணத்தின் தாக்கம் குறையவும்தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகங்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் ஆறு கிரக சேர்க்கை
மற்றும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு வருகிற 26.12.2019 வியாழக்கிழமை, 27.12.2019 வெள்ளிக்கிழமை
ஆகிய இரண்டு நாட்கள் காலை, மாலை இருவேளையும் மாபெரும் நவக்கிரக ஹோமத்துடன் ஆதித்ய
ஹோமமும், காலசக்கிர பூஜையும் நடைபெறுகிறது.
தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் டிசம்பர் 25 இரவு முதல் டிசம்பர் 27 இரவு வரை
சூரியன், சந்திரன், சனி, குரு, புதன், கேது ஆகிய ஆறு கிரகங்கள் ஒன்றாக தனுசு ராசியில் இணைந்திருக்கும்.
அதன்பிறகு சந்திரன் மகரம் ராசிக்கு நகர்ந்து விட்டாலும் ஐந்து கிரகங்களின் கூட்டணி
ஜனவரி 13ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த கிரகங்களின் சேர்க்கையை முன்னிட்டு 12 ராசிக்காரர்களுக்கும் பரிகாரம் செய்து கொள்ளும் விதத்தில் ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாபெரும் பரிகார
ஹோமங்கள், பூஜைகள் சிறப்பு அபிஷேகங்கள் காலை, மாலை இருவேளையும் நடைபெற உள்ளது.
சந்திரன் ஒரு
ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும், சூரியன் மாதம்
ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கின்றன. குரு ஆண்டுக்கு
ஒருமுறையும், சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ராகு கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இடப்பெயர்ச்சி அடைகின்றன.
இந்த ஆண்டு இறுதி வரை தனுசு ராசியில் சனி, கேது, குரு சஞ்சரிக்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் ராஜகிரகங்கள் சூரியன், சந்திரன், புதன்
தனுசுவில் இணையப்போகின்றன. சூரியன், வியாழன்
சேர்க்கை பற்றிய பயம் வேண்டாம். இந்த கிரக சேர்க்கையினால் பெரிய பேரழிவு எல்லாம்
வராது. சூரியனும் சனியும் சேர்ந்து பாக்ய ஸ்தானத்தில் இணைவதால் பிறக்கும்
குழந்தைக்கு யோகங்கள் வரும்.
காலபுருஷ
தத்துவப்படி 9ம் வீட்டில்
அதாவது தனுசில் குரு ஆட்சி புரிந்து இருப்பது மிகச் சிறந்த ஒன்று. டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் தனுசில் சூரியன், சந்திரன், குரு, சனி, கேது, புதன் சேர்க்கை என்பது இரண்டரை நாட்களில் இந்த நிகழ்வு
நடைபெறப்போகிறது. இந்த அமைப்பால் ஒரு சில யோகங்கள், கிரக யுத்தம், மற்றும் தோஷங்கள் நடைபெறும். வருஷ கிரகங்கள் என்று கூறப்படும் குரு,
சனி, கேதுக்களுடன் மாத கிரகங்கள் என்று கூறப்படும் சூரியன், புதன் மற்றும் இரண்டரை நாட்கள் சஞ்சரிக்கும் மனோகரகனுடன் சந்திரனோடு
சேரும் பொழுதும் அதே நேரம் ராகுவின் பார்வையும் இந்த காலகட்டத்தில் இடம்பெறும்.
கால
புருஷனுக்கு ஒன்பதாம் வீடு, பாக்ய ஸ்தானத்தில் தந்தை கிரகமான சூரியன், தாய் கிரகமான சந்திரன், உழைப்பு
கிரகமான ஆயுள்காரகன் சனி, அறிவு கிரகமான
புதன், ஞானகாரகன் கேது கூடவே குருவும் இணைகின்றன. ஒரு ராசியில் இப்படி ஆறு
கிரகங்கள் இணைவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். இந்த ஆண்டு அது
நிகழப்போகிறது. இதனால் சில அரசியல் மாற்றங்கள் சட்டங்கள் இயற்ற முற்படுவார்கள். இத்தகைய சூழ்நிலையில் கர்மாவை போக்கி கொள்ள தான தர்மம்
செய்வதும், ஆன்மீக
செயல்களில் தன்னை ஈடுபடுத்தி கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும் என்கிறார் ஸ்தாபகர்
யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
இந்த ஆறு
கிரகங்களின் தாக்கத்தின் காரணமாக சில பிரச்னைகளுக்கு மன குழப்பமான சூழ்நிலையில் முடிவெடுக்க வேண்டியிருக்கும். 12 ராசிக்காரர்களுக்கும் அசுப பலன்கள் குறையவும், சுப பலன்களை அனுபவிக்கவும்,
முக்கியமாக ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், தனுசு, மகரம் போன்ற
ராசிகள் மற்றும் லக்கினகாரர்களுக்கு ஏற்படும் அசுப பலன்கள் குறையவும், 6
கிரகங்களால் ஏற்படும் பயங்கள், தோஷங்கள் அகலவும், சூரிய கிரகணத்தினுடைய தாக்கம்
குறையவும், முன்னோர்களின் ஆசி வேண்டியும் தன்வந்திரி பீடத்தில் வருகிற 26.12.2019 மற்றும் 27.12.2019 ஆகிய இரண்டு நாட்கள்
மாபெரும் நவக்கிரக ஹோமத்துடன் ஆதித்ய ஹோமமும், காலசக்கிர பூஜையும் நடைபெற உள்ளது.
மேலும் பரிகார க்ஷேத்திரமாக ஆந்திரா மாநிலம் களாஸ்த்ரிக்கு அடுத்த படியாக
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் திகழ்ந்து வருவதால், இப்பீடத்தில் நடைபெறும் பரிகார
ஹோமத்தில் பங்கேற்று பலன் பெற பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment