தன்வந்திரி பீடத்தில்பஞ்சமுக வராஹி ஹோமத்துடன்நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன்
வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வளமான வாழ்க்கை வேண்டியும்,
வெற்றிகளை பெற வேண்டியும், விபத்துக்கள் குறைய வேண்டியும் ஸ்ரீ வராஹி ஹோமமும்,
ஸ்ரீ பால திரிபுரசுந்தரி ஆலயத்தில் நவாவரண பூஜையும் நடைபெற்றது.
மேலும்
இன்று ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி J.ஜெயபாரதி
அவர்கள் ஏழுதிய “108 வைணவ திவ்ய தேசப் பயணம்” நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இந்நூலை பிடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வழங்க தினகரன் ஆன்மிகம் துணை ஆசிரியர்
திரு. பரணிகுமார் அவர்கள் பெற்றனர். தொடர்ந்து பத்ரிகை நிருபர் திரு.துரைராஜ் அவர்கள்
நன்றியுரை வழங்கினார்.
மேலும் நடைபெற்ற ஹோமத்திலும் பூஜைகளிலும் பங்கேற்ற
பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment