வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில்தைலபிஷேக
விழா துவங்கியது.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
அருளாசிகளுடன் இன்று 28.11.2019 வியாழக்கிழமை
காலை 10.00 மணிக்கு
ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தைலாபிஷேக
விழா துவங்கியது. இவ்வைபவம் வருகிற 14.12.2019 சனிக்கிழமை
வரை தினமும் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.
இதில்
கோ பூஜை, மங்கள இசை, கணபதி பூஜை, வேதபாரயணங்கள் நடைபெற்று மஹா தன்வந்திரி
ஹோமத்துடன் தைலாபிஷேக விழா துவங்கியது. மேலும் இவ்விழாவில் எராளமான பக்தர்கள்
பங்கேற்று ஆயுள் தோஷம் நீங்கவும், மனத்தடைகள் விலகவும், மன
நோய்கள் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும்
கஷ்டங்கள் குறைவும், ஏழரைசனி, அஷ்டம
சனி, அர்தாஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும்
பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், சர்க்கரை நோய், புற்று நோய், வலிப்பு நோய்,
மூட்டு வலி, வாய் புண், வயிற்று புண், குடல்
சம்மந்தமான நோய்கள், ஆரோக்ய சம்மந்தமான நோய்கள் போன்ற
பல்வேறு நோய்கள் நீங்குவதற்கு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.
இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி தைலபிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment