வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ
பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹா கும்பாபிஷேகம்,
1008
சுமங்கலி பூஜையின்பூர்வாங்க
பூஜைகள் துவங்கியது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
59 வது ஜெயந்தியை முன்னிட்டு
வருகிற ஐப்பசி 17 ஆம் தேதி 03.11.2019
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி
ஆலய மஹா கும்பாபிஷேகம், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி
பூஜை விழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று 01.11.2019 வெள்ளிக்கிழமை
காலை
6.00 மணி முதல்
துவங்கியது.
இதில்
மங்கள இசை, கோ பூஜை, விக்நேஸ்வர பூஜை, அனுக்ஞை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்,
ஸ்ரீ விநாயக தன்வந்திரி அபிஷேகம் நடைபெற்றது. இவ்வைபவங்களில் மும்பை ஸ்ரீகுரு
அம்ருத் கருணாமயி அவர்கள் மற்றும் ஏராளமானவர்கள் பங்கேற்ற சிறப்பித்தனர்.
தொடர்ந்து
மாலை 5.00 மணி
முதல் வாஸ்து ஹோமம், புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், ஆசார்யவரணம்,
கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, ஹோமம், சதுர்வேத பாராயணம்,
பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
இதனை
தொடர்ந்து நாளை காலை 7.00 மணி
முதல் 10.30 மணி வரை மங்கள இசை, கோ பூஜை, 2
ஆம்
கால பூஜை, சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, நேத்ரோன் மீலனம், அஷ்ட பந்தன
சமர்ப்பணம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து மாலை 5.00
மணிக்கு
வேலூர் ஸ்ரீ கிருஷ்ண கலா மந்திர் மாணவிகளின் பரதநாட்ய நிகழ்சியும்,
மாலை 6.30 மணி
முதல் மங்கள இசையுடன் 3 ஆம்
கால பூஜை, ஹோமம், சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி நடைபெற உள்ளது. இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment