தன்வந்திரி பீடத்தில்பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு64 பைரவர் யாகத்துடன் 64 திரவிய அபிஷேகமும்சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.
இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி
பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு 19.11.2019 செவ்வாய்கிழமை 64 பைரவர்களுக்கு
64 தீபங்கள்
ஏற்றி, 64 யாக்குண்டங்களில் 64 நபர்களால் 64 யோகினி பூஜையுடன் 64 பைரவர் யாகம் நடைபெற்று 64 திரவியங்களால் அஷ்ட பைரவர் சகித மஹா கால பைரவருக்கும், பஞ்ச
திரவியத்தினால் சொர்ணாகர்ஷண பைரவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அர்ச்சனையும், ஆராதனைகளும் 64 தீபம் ஏற்றி வழிபாடும்
நடைபெற்றது.
இந்த யாகத்தில் நெய், தேன், சமித்துகள், 64 வகை பழங்கள், 64 வகை புஷ்பங்கள்,
பட்சணங்கள், 64 நிவேதனங்கள், மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா
பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடும் மஹா அபிஷேகமும் நடைபெற்றது. இதில்
தொழிலதிபர்கள், விவசாய பெருமக்கள், சுற்றுபுற நகர கிராம மக்கள், ஆந்திரா, கர்நாடகா
மாநில மக்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்களை வழங்கினார். மேலும் மஹா அனாதானம் நடைபெற்றது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment