தன்வன்திரி பீடத்தில்வாஸ்து நாளை முன்னிட்டுவாஸ்து ஹோமம் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வாஸ்து
நாளை முன்னிட்டு இன்று 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை
காலை
11.30 மணி முதல் 12.30 மணி வரை வாஸ்து
சாந்தி ஹோமமும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில்
நவ தானியங்கள்,
வெல்லம், நெல்பொரி, சர்க்கரை
பொங்கல், பூசணிக்காய், சிகப்பு வஸ்திரம், நெய், தேன்,
நவ சமித்துக்கள் சேர்க்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.
தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பஞ்ச திரவியங்களால் ஸ்ரீ வாஸ்து
பகவானுக்கும், அஷ்டதிக் பாலகர்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அர்ச்சனையும் ஆராதனைகளும்
நடைபெற்றது. தொடர்ந்து வாஸ்து பிரசாதமாக பூஜிக்கபட்ட வாஸ்து யந்திரம், மத்ச யந்திரம்,
வில்வக்காய், திருஷ்டிக்காய், செங்கல், பூமி மண்ணு, மூலிகை சாம்பிராணி பக்தர்கள் வாங்கி
சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment