தன்வந்திரி
பீடத்தில்
ஏகாதசி
ஹோமமும்
சிறப்பு
நெல்லிக்காய் பொடி திருமஞ்சனமும்.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், உலக மக்கள் நலன்
கருதி தை ஏகாதசியை முன்னிட்டு வருகிற 31.01.2019 வியாழக்கிழமை
காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு
மஹா தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு நெல்லிக்காய் பொடி திருமஞ்சனம் நடைபெறுகிறது.
ஏகாதசி என்பது பெருமாளுக்கு உகந்த அற்புதமான விரத நாளாகும். தை மாத
ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளின் நடைபெறும் ஹோமங்களிலும்,
பூஜைகளிலும் பங்கேற்று பெருமாளை வழிபடுவதின் மூலம் சகல சம்பத்துகளுடன் நோயின்றி
ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில், வருகிற
31.01.2019 வியாழக்கிழமை வரும் தை மாத ஏகாதசி, சர்வ ஏகாதசி என்று
அழைக்கப்படுகிறது. இந்த விசேஷ நாளில் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் மஹா தன்வந்திரி ஹோமத்திலும் சிறப்பு பூஜைகளிலும்
பங்கேற்பவர்களுக்கு நிம்மதியான
தூக்கம் கிடைத்து, துன்பங்கள் துயரங்கள் நீங்கி, உடல் நோய் மன நோய் நீங்கி, வலிகளில் இருந்து நிவாரணம் பெற்று, ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெருவதிற்கு உண்டான தடைகள் நீங்கி, சகல சம்பத்துடன்
நோய் நொடிகளின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
இதில்
பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி,
மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு, மிளகு,
திப்பிலி, நல்லெண்ணை, பழங்கள்,
புஷ்பங்கள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள், கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று
தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment