தன்வந்திரி பீடத்தில்
தைப்பூசம் மற்றும் வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.
வேலூர்
மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன்,
தைப்பூசம் மற்றும் வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு இன்று 21.01.2019
திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றது.
அருளாளர்
ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) வடலூரில் சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பி வந்தவர். இவர் 1876-ம் ஆண்டு
தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். வள்ளலாருக்கென்று தன்வந்திரி பீடத்தில் தனி
சன்னதி அமைத்து பூஜைகளும், ஹோமங்களும்
செய்து வருகிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். அந்த வகையில் உலக மக்களின்
நலன் கருதி இன்று 21.01.2019 திங்கள்கிழமை வள்ளலார் ஜோதியில் கலந்த நன்னாளை முன்னிட்டு பீடத்தில்
அமைந்துள்ள வள்ளலாருக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஹோமும் கஞ்சி வழங்கும்
விழாவும் நடைபெற்றது.
மேலும்
தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள கார்த்திகை குமரனுக்கும் சிறப்பு
அபிஷேகமும், ஹோமமும், பூஜைகளும் நடைபெற்றது. இந்நிகழ்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment