தன்வந்திரி பீடத்தில் 15 ம் ஆண்டு சமத்துவ பொங்கலுடன்சமயநூல் வழங்கும் விழா.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர
ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று 15.01.2019 செவ்வாய்கிழமை 15 ம் ஆண்டு சமத்துவ பொங்கலுடன் சமயநூல்
வழங்கும் விழா நடைபெற்றது.
காலை கோபூஜை, கலச பூஜை செய்து வியாபாரம், விவசாயம், தொழிலில் நல்ல
முன்னேற்றம், பிரகாசமான வாழ்கை அமைய வேண்டி தைத்திருநாளான இன்று சூரிய பகவானை வழிபடும்
விதத்தில் ஆதித்ய ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ
தன்வந்திரி பெருமாளுக்கு ஐந்து விதமான பொரியலுடன், கூட்டு, சர்க்கரை பொங்கல், வடை,
மோர்க்குழம்பு, ரசம் போன்ற பலவிதமான சமையல்கள் செய்து அலங்கார தளிகையாக நிவேதனம் செய்யப்பட்டது.
நண்பகல் 1.00 மணிக்கு சூரிய பூஜை செய்து, பொங்கலோ பொங்கல் என்று அனைவரும்
சூரிய பகவானையும், காலசக்கிரத்தையும் வழிபட்டனர். இதனை தொடர்ந்து ஆன்மிகம்
வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத குருமார்களையும், தெய்வங்களையும்
பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல் ஒழுக்கமும், மனித நேயமும், மத நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின்
குருவருளுடன் அப்பர், சம்பந்தர், சுந்தரர்
பாடிய தேவராம், மாணிக்கவாசகர்
பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற
பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்,
12 ஆழ்வார்கள்
பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், பல மகான்கள் எழுதிய பல்வேறு சமய நூல்கள் சமத்துவ பொங்கலுடன் வழங்கப்பட்டது.
இதில் பிரான்ஸ், மொரிசியஸ் போன்ற நாடுகளிலிருந்து தவத்திரு. அகிலேஷ் குருஜி
அவர்கள் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அனைவரையும் ஆசிர்வதித்து அன்னதானம் வழங்கினார்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment