இந்தியாவில்
வாஸ்துபகவானுக்கென்று தனிகோயில்
வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில்
ஜூலை 27ல் வாஸ்துநாளை
முன்னிட்டு
வாஸ்துதோஷ நிவர்த்தி
ஹோமம்.
வளமான வாழ்க்கைக்கு வாஸ்து ஹோமம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
பீடாதிபதி யக்ஞ புருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் வருகிற 27.07.2017
வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் வாஸ்து
நாளை முன்னிட்டு வாஸ்து தோஷநிவர்த்தி ஹோமம் நடைபெறவுள்ளது.
மக்கள் பல லட்சங்கள் செலவு செய்து பெரிய பெரிய கட்டிடங்களும், அலுவலகங்களும், வீடுகளும், தொழிற்சாலைகளும் கட்டி குடியேறுகின்றனர். அங்கு குடியேறியபின் குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நஷ்டம், திருமணத்தடை, குழந்தையின்மை,
விபத்து, பொருளாதாரத்தடை போன்ற எண்ணற்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் முறையாக வாஸ்து பார்த்து கட்டிடம் கட்டியிருக்க மாட்டார்கள். கட்டிய பின்னர் வாஸ்து பார்த்து திருத்தியமைக்க விரும்பினால், தேவையற்ற பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன.இதுபோன்ற வீண்விரயங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேலே புராணத்தில் சொல்லியுள்ள படி, உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாலாஜாப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,தனி சன்னதியாக வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியிலும் இருபாதம் தென்மேற்கு பகுதியிலும் உள்ளபடியே அமைத்திருக்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.இதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமானின் உடலிலிருந்து வாஸ்து பகவான் வெளிப்பட்டு அசுரர்களை அழித்துவிடுகிறார்.அசுரர்களை அழித்துவிட்டு மீண்டும் சிவனிடம் வந்து ”தாங்கள் இட்ட வேலை முடிந்து விட்டது, மீண்டும் உத்தரவிடுங்கள்”
என்றார். சிவபெருமானும் ”தற்போது உனக்கு வேலையில்லை நீ வருடத்தில் 8 நாட்கள் மட்டும் விழித்திருந்து மீதி நாட்கள் படுத்துறங்கி, விழித்திருக்கும் எட்டு நாட்கள் மட்டும் என்னை பூஜை செய்”
என்றார். ஆகவேதான் வாஸ்துபகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியிலும் இருபாதம் தென்மேற்கு பகுதியிலும் அமைந்திருக்கும்.வாஸ்து விழிக்கும் நாளில் மக்கள் அவரை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைப்பது மட்டுமல்லாமல் மனிதர்கள் குடியிருக்கும் இடங்களைச் சுற்றி தோஷங்கள் அண்ட விடாமல் பாதுகாப்பது வாஸ்து பகவானின் வேலையாகும்.
முறையான வாஸ்துவின் நன்மைகள்: வாஸ்து முறையான கட்டிடத்தில் குடியிருப்பதால் முதலில் மனநிம்மதி, உடல் ஆரோக்கியம், நல்வழி, நல்லவர்கள் தொடர்பு, ஏமாறாமல் இருப்பது, ஏமாற்றாமல் இருப்பது, குடும்ப ஒற்றுமை, உறவினர்கள் உறவு, எதிரிகள் தாக்குதலில் நிவர்த்தி போன்ற சகல நன்மைகள் உருவாகும். மேலும் புதிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கட்ட இருப்பவர்களுக்கு, வாஸ்து பகவானிடம் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கல், மண், வாஸ்து யந்திரம் போன்றவைகள் மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வழங்கி வருகிறோம், வாஸ்து நாளான 27.07.2017 வியாழக்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து பகவானுக்கு பூஜையும், வாஸ்து ஹோமமும் நடைபெற உள்ளது மேலும் அன்றைதினம் காலை
10.00 மணியளவில் ராகு கேது பெயர்ச்சியை
முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெறவுள்ளது. அந்த யாகத்திலும் பாலஜோதிடம் வாசகர்கள், ஜோதிடர்கள்
மற்றும் சந்தாதாரர்கள் பங்கேற்று பயன்பெற கேட்டுகொள்கிறோம். என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
தொடர்புக்கு,
No comments:
Post a Comment