வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில்
சகஸ்ரசண்டி மகாயாகம்
இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை ஸ்வாமிகள்
பங்கேற்பு
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 23.07.2017 முதல் 30.07.2017 வரை உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம்
( 1000 சண்டி யாகம் ) நடைபெற்று வருகிறது.
இன்று 26.07.2017 நான்காவது நாளாக
ஆடி பூரத்தை முன்னிட்டு புதன் கிழமை
மதுரை ஆதீனம் குரு மஹா சன்னிதானம் அவர்களின் ஆசிகளுடன் காலை 9.00 முதல் 12.00 மணி வரை
கோ பூஜை, யாகசாலை ப்ரவேசம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், எஜமான சங்கல்பம், ரித்விக்
வரணம், கலச பிரதிஷ்டை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், திதிநித்யா மூல மந்த்ர விசேஷ
ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர் பூஜை,
மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம் சப்தசதி பாராயணம், ஸஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி,
மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. இந்த யாகத்தில் இரத்தினகிரி
தவத்திரு பாலமுருகனடிமை ஸ்வாமிகள், தவத்திரு கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள் கலந்துகொண்டு
சண்டி ஹோம பாராயணத்தை துவக்கி வைத்து அருள் பிரசாதம் வழங்கினார்கள். மதுரை ஆதீனம் குரு
மஹாசன்னிதானம் அவர்கள் சஹஸ்ர சண்டி யாகம் சிறப்பாக நடைபெற தொலைபேசி மூலம் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் அவர்களுக்கு ஆசி வழங்கினார். இந்த யாகத்திற்கு சோளிங்கபுரம் நாதஸ்வர வித்வான்
திரு சித்திர குமரன் அவர்கள் தலமயில் 10க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர வித்வாங்களின்
மங்கள இசை நடைபெற்று வருகிறது. இதில் சென்னை திரு கல்யாணராமன், திரு பிரகாஷ், திரு
ஊட்டி ராஜசேகர், மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த யாகத்தில் 70க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று
சஹஸ்ர சண்டி யாக பாராயணம் செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து நாளை
27.07.2017 வியாழக்கிழமை இராகு கேது பெயர்ச்சி
யாகத்துடன் காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம்,
விநாயகர் வழிபாடு, கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ வராஹி மூலமந்த்ர
விசேஷ ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர் பூஜை, பூர்ணாஹுதி,
மங்களார்த்தி, பிரசாத விநியோகம் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment