வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் தமிழகத்தில் முதல்
முறையாக 300 நாதஸ்வர கலைஞர்கள் பங்குபெற்ற நாத
சங்கம நிகழ்சியுடன் கோலஷ்மி மற்றும்
ரிஷப ராஜா
திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழகத்தில்
முதல் முறையாக வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள
தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் மழை வேண்டியும் இயற்கை
வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இன்று ஆடி மாதம் 5ம் தேதி 21.07.2017 வெள்ளிக் கிழமை காலை கோபூஜை கணபதி பூஜை, புண்ணியாவாசனம், மஹாமண்டப
பூஜை, இரட்சாபந்தனம், யக்ஞோபவீதம், பாதபூஜை, வஸ்திரதானம், மஹாசங்கல்பம், கன்னிகாதானம்,
தம்பதிபூஜை, பஞ்சதானம், தசதானம், போன்ற பூஜைகள் நடைபெற்று காலை 10.00 மணிக்கு திருமாங்கல்யம் 300 நாதஸ்வர கலைஞர்கள்
இசைக்க வலமாக வந்து தட்சிணாமூர்த்தி சன்னதியிலும் ஸ்வாமிகளின் பெற்றோர்களின் சன்னதியிலும்,
வீரப்ரம்மங்காரு சன்னதியிலும் வைத்து சிறப்பு பூஜை செய்து 20 க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள்
முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் 20 க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் புடை சூழ 300க்கும் மேற்பட்ட சீர்வரிசையுடன்
பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் கோமாதாவிற்கும் ரிஷபராஜாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
மேற்கண்ட திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு
நேற்று 20.07.2017 வியாழக்
கிழமை காலை 10.00 கணபதி ஹோமம் மாலை
6.00 மணிக்கு சிவ பார்வதி யாகத்துடன்
ஸ்ரீ லட்சுமி நாராயண ஹோமமும் நடைபெற்று மாலை
6.30 மணிக்கு
மாப்பிள்ளை அழைப்பும் 7.00 சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியுடன் அறுசுவை
விருந்தும் நடைபெற்றது. இதினை முன்னிட்டு வேலூர், ஆர்க்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம்,
திருத்தணி பக்தர்களுக்கு அரசு புறநகர மற்றும்
மாநகர பேருந்து வசதி செய்யப்பட்டது.இரண்டு
நாட்களும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது .இதில் கோயம்பத்தூர் ஆர்.வி.எஸ்.குருப் சேர்மன்
திரு.கே.வி.குப்புசாமி அவர்கள் தவத்திரு.மோகனானந்தா ஸ்வாமிகள் கோயம்பத்தூர் காமாட்சிபுரி ஆதினம் விஜயவாடா சைவஷேத்திர
பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவசாமிகள், பனக்கால பள்ளி மடாதிபதி மேலும் ஆந்திராவிலிருந்து
20க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் பங்கேற்றனர். குற்றாலம் டாக்டர் ஸ்ரீநிவாசன், வேலூர் துர்காபவன் உரிமையாளர் திரு. உதயசங்கர், காஞ்சிபுரம்
வி.ஜி.என்.டால்மில் உரிமையாளர் திரு.சரவணன், சென்னை டாக்டர் மாயா, திருமதி.கங்காபாய்,
திருமதி ரேவதி அமுதன், திரு பிரகாஷ், திருமதி ரமா வெங்கட்ராமன், திருப்பத்தூர் சாரதி
ஜெயராமன் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும்
வியாபாரிகள், பொதுமக்கள், பக்தர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழா மேடையில் கோமாதாவிற்கும்
ரிஷபராஜாவிற்கும் சிறப்பு அலங்காரமும் வண்ண விளக்குகளும் செய்யப்பட்டு இருந்ததை கண்டு
பக்தர்கள் அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து சென்றனர்.
இந் நிகழ்ச்சி ஏற்பாட்டினை தன்வந்திரி பக்தர்களும்
தன்வந்திரி குடும்பத்தினரும் செய்திருந்தனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு ஸ்வாமிகள் ஆசீர்வதித்து
தாம்பூல பிரசாதத்தை வழங்கினார். நிறைவாக ஸ்வாமிகள் அருளாசியில் தமிழகத்தில் முதல் முறையாக
இத்திருமணம் நடைபெற்றது என்ற தகவலை தெரிவித்தார்.
No comments:
Post a Comment