தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் இன்று ஜீலை மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
ஆனி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் மாபெரும் சுதர்சன ஹோமம் வெகு
சிறப்பாக நடைபெற்றது
இந்த
யாகத்தில் தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட
ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும்,
பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில் உள்ள பசு அதிகம் பால்சுரக்கவும், பசுவை எந்த நோயும்
அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும்,
எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும்,
விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற
கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத்
திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் பிரார்த்தனை செய்யபட்டது.
இந்த
யாகத்தில் வெண்கடுகு, எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம், அருகம்புல்,
சர்க்கரை பொங்கல், தயிர், நாயுருவி, ஆலமரசமித்து, நெய், பஞ்சகவியம், கருநொச்சி, இருமுள்,
நீல ஊமத்தபூ, வெள்ளை புலாச்சு, குக்கிலு, சம்மதபூ, வெண்பட்டு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டது.
மேலும்
சுதர்சன பெருமாளுக்க 16 விதமான அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச
அர்ச்சனையும் நடைபெற்று தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவிதனர்.
No comments:
Post a Comment