வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில்
சகஸ்ரசண்டி மகாயாகம்
ஸ்வாமிகள் பங்கேற்பு
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தின் பீடாதிபதி
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைபடி 23.07.2017 முதல் 30.07.2017
வரை உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் ( 1000 சண்டி யாகம் ) நடைபெற்று வருகிறது.
28.07.2017 6வது நாளாக நாக பஞ்சமி,
கருட பஞ்சமி, சஷ்டி திதி, வெள்ளிக் கிழமை கூடிய நாளான இன்று காலை 9.00 முதல்
12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை,
ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ சோடஷ மஹாலஷ்மி யாகம், ஸ்ரீசூக்த ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், சுவாசினி பூஜை கன்னியா பூஜை,
வடுகபைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், குபேர லக்ஷ்மி யாகம், பூர்ணாஹுதி,
மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம் நடைபெற்றது.
இந்த யாகத்தில்
பெங்களூர் ஒம்காரனந்த ஆஸ்ரம பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மதுசூதானந்த கிரி ஸ்வாமிகள், திருவடிசூலம்
51அடி கருமாரியம்மன் ஆலய பீடாதிபதி ஸ்ரீ மதுர முத்து ஸ்வாமிகள், வடபாதி சித்தர், முன்னாள்
தமிழக தேர்தல் ஆணையர் திரு பழனிச்சாமி I.A.S. அவர்கள் மற்றும் ஈரோடு தொழிலதிபர் திரு
சேகர், திரு சபரி, டாக்டர் தொப்பகவுண்டர், வாலாஜாபேட்டை இந்த யாகத்தில் 70க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று
சஹஸ்ர சண்டி யாக பாராயணம் செய்து வருகின்றனர். இதன் நிறைவு விழா 30.07.2017 ஞாயிற்று
கிழமை மாலை 6.30 மணியளவில் மஹாபூர்ணாஹுதி நடைபெறவுள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment