Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, July 29, 2017

Sundara Homangal / Homams

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்ஆண்/பெண் சுகமான வாழ்வு வாழ சுந்தர ஹோமங்கள்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சந்தான கோபால யாகம், கந்தர்வராஜ ஹோமம்,சுயம்வரகலா பார்வதிஹோமம், நடைபெற உள்ளது.

சந்தான கோபால யாகம் 19.08.2017 சனிக்கிழமை.


குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி 19.08.2017 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது.
இந்த யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

கந்தர்வ ராஜ ஹோமம் 20.08.2017. ஞாயிற்றுகிழமை.


திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற 20.08.2017. ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சென்ற 12 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 3000க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்றுபயனடைந்துள்ளார்கள்.

சுயம்வர கலா பார்வதி ஹோமம் 27.08.2017 ஞாயிற்று கிழமை.


இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.
அந்த வகையில் வருகிற 27.08.2017 ஞாயிற்று கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது. மேலும் இதில் பங்கேற்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்படும். ஸ்ரீதன்வந்திரி பகவானின் ஆசி பெறுவதற்கு ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு:

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,கீழ்புதுப்பேட்டை,அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,தொலைபேசி: 04172-230033 / 230274 / 09443330203 E-Mail : danvantripeedam@gmail.com Web : www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in

Friday, July 28, 2017

Swayamwarakala Parvathi Yagam With Sahasra Chandi Yagam.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
30.07.2017ல்
ஸகஸ்ர சண்டி யாக நிறைவுடன்
சுயம்வரகலா பார்வதி ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 23.07.2017 முதல் 30.07.2017 வரை உலக நலன் கருதியும் சகல ஐஸ்வர்யம் பெறவும் சஹஸ்ர சண்டி யாகம் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு 30.07.2017ல் மாலை மஹாபூர்ணாஹுதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 10.00 மணிக்கு பெண்கள் திருமணத் தடை நீக்கும்  சுயம்வர கலா பார்வதி  ஹோமம் நடைபெற உள்ளது.
சுயம்வர கலா பார்வதி  ஹோமம்
ஒவ்வொருவருக்கும் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது திருமணம் ஆகும். அந்த திருமண நிகழ்வு பல தோஷங்களால் தடைபட்டு திருமணம் நடப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இந்த திருமணத் தடைகளை நீக்கி விரைவில் திருமணம் ஆவதற்கு வழிவகை செய்யும் சுயம்வரகலா பார்வதி ஹோமம் ஆகும்.
இந்த பார்வதி ஹோமம் என்பது பார்வதி தேவிக்காக செய்யப்படுவதாகும். அவ்வாறு செய்யப்படும் சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரம் தேவி பார்வதி அவர்களே சிவபெருமானை போற்றிச் செய்தது என்றும், அந்த ஹோமத்தை செய்ததின் விளைவாக தேவி பார்வதி சிவபெருமானை மணந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே திருமணங்கள் ஆகாதவர்கள் அவர்களது திருமணத் தடங்கல்களை முழுமையாக நீக்கி அவர்களுக்கு நல்ல முறையில் உடனே திருமணம் நடப்பதற்காக இந்த ஹோமம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரக தோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்படுகிறது. பின்னர் திருமணம் உடனே நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் பங்கேற்பதால் சர்பதோஷம், ராகுதோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் நவக்கிர தோஷங்கள் நீங்கி பெற்றோரின் ஆசிகளுடன் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவியும், மனைவிக்கு ஏற்ற கணவகும் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203

Sahasra Chandi Yagam 28.07.2017

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில்

சகஸ்ரசண்டி மகாயாகம்

ஸ்வாமிகள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தின் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைபடி 23.07.2017 முதல் 30.07.2017 வரை உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் ( 1000 சண்டி யாகம் ) நடைபெற்று வருகிறது.

28.07.2017 6வது நாளாக நாக பஞ்சமி, கருட பஞ்சமி, சஷ்டி திதி, வெள்ளிக் கிழமை கூடிய நாளான இன்று காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ சோடஷ மஹால‌ஷ்மி யாகம், ஸ்ரீசூக்த ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், சுவாசினி பூஜை கன்னியா பூஜை, வடுகபைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், குபேர ல‌க்ஷ்மி யாகம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம் நடைபெற்றது.
இந்த யாகத்தில் பெங்களூர் ஒம்காரனந்த ஆஸ்ரம பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மதுசூதானந்த கிரி ஸ்வாமிகள், திருவடிசூலம் 51அடி கருமாரியம்மன் ஆலய பீடாதிபதி ஸ்ரீ மதுர முத்து ஸ்வாமிகள், வடபாதி சித்தர், முன்னாள் தமிழக தேர்தல் ஆணையர் திரு பழனிச்சாமி I.A.S. அவர்கள் மற்றும் ஈரோடு தொழிலதிபர் திரு சேகர், திரு சபரி, டாக்டர் தொப்பகவுண்டர், வாலாஜாபேட்டை இந்த யாகத்தில் 70க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று சஹஸ்ர சண்டி யாக பாராயணம் செய்து வருகின்றனர். இதன் நிறைவு விழா 30.07.2017 ஞாயிற்று கிழமை மாலை 6.30 மணியளவில் மஹாபூர்ணாஹுதி நடைபெறவுள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Thursday, July 27, 2017

Rahu Kethu Peyarchi Yagam 2017 and Vasthu Homam along with Sahasra Chandi Yagam (1000 Chandi Homam).

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில்
சஹஸ்ர சண்டி யாகத்தில் ராகு கேது பெயர்ச்சி யாகம் வாஸ்து ஹோமம் நடைபெற்றது.

வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம் என்றே பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளாலும்,  டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 73க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகள் உள்ளன.

அவற்றுள் ராகு & கேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ஏக சரீர ராகு & கேது-வாக தரிசனம் தரும் இந்த ராகு & கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது.

ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.

பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே!  ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.

ராகு & கேது பெயர்ச்சி இன்று 27.07.2017 வியாழன் சிம்மம் ராசியிலிருந்து இருந்து கடகராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் கும்பத்திலிருந்து மகரத்திற்கு  இடப்பெயர்சி செய்கிறார்

அடுத்த ஒண்ணரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள்.

தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும்.ராகு & கேது பெயர்ச்சிவிமரிசையாக இன்று 27.07.2017 வியாழக் கிழமை  காலை கோ பூஜை, கபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் 10.00 மணி முதல் 12.00 மணி வரை 1000 சண்டி யாகத்துடன் வாஸ்து ஹோமமும் நடைபெற்றது. இதில் மேஷம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், போன்றராசிக்காரர்களும் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்து கொண்டு பலன் பெற்றனர்.
இந்த யாகத்தில் திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு  இந்தப் பெயர்ச்சியில் கலந்து கொண்டு பிரார்த்தினை செய்தனர்.


நிறைவாக ஸ்ரீ இராகு கேது பகவானுக்கு சிற்ப்பு பாலபிஷேகமும் மஞ்சளபிஷேகமும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகமும் நடைபெற்று இறை பிரசாதம் வழங்கபட்டது. இதில் டாக்டர் குழந்தைவேல், ஆர்காடு தொழில் அதிபர் திரு ஜெ.லக்ஷ்மணன், பென்ஸ் பாண்டியன், சோளிங்கர் ஏ.எல் சாமி, காஞ்சீபுரம் பாலு சாஸ்திரி மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். சஹஸ்ர சண்டி யாகத்த்துடன் நடைபெற்ற இராகு கேது பெயர்ச்சி யாகம் வாஸ்து யாகத்திலும் கலந்து கொண்ட் பக்தர்கள் பெரும் பாக்யமாக கருதினர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தினர்.







Wednesday, July 26, 2017

Sahasra Chandi Yagam

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில்

சகஸ்ரசண்டி மகாயாகம்

இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை ஸ்வாமிகள் 

பங்கேற்பு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 23.07.2017 முதல் 30.07.2017 வரை உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் ( 1000 சண்டி யாகம் ) நடைபெற்று வருகிறது.

இன்று 26.07.2017 நான்காவது நாளாக ஆடி பூரத்தை முன்னிட்டு புதன் கிழமை மதுரை ஆதீனம் குரு மஹா சன்னிதானம் அவர்களின் ஆசிகளுடன் காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, யாகசாலை ப்ரவேசம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், எஜமான சங்கல்பம், ரித்விக் வரணம், கலச பிரதிஷ்டை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், திதிநித்யா மூல மந்த்ர விசேஷ ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம் சப்தசதி பாராயணம், ஸஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. இந்த யாகத்தில் இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை ஸ்வாமிகள், தவத்திரு கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள் கலந்துகொண்டு சண்டி ஹோம பாராயணத்தை துவக்கி வைத்து அருள் பிரசாதம் வழங்கினார்கள். மதுரை ஆதீனம் குரு மஹாசன்னிதானம் அவர்கள் சஹஸ்ர சண்டி யாகம் சிறப்பாக நடைபெற தொலைபேசி மூலம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களுக்கு ஆசி வழங்கினார். இந்த யாகத்திற்கு சோளிங்கபுரம் நாதஸ்வர வித்வான் திரு சித்திர குமரன் அவர்கள் தலமயில் 10க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர வித்வாங்களின் மங்கள இசை நடைபெற்று வருகிறது. இதில் சென்னை திரு கல்யாணராமன், திரு பிரகாஷ், திரு ஊட்டி ராஜசேகர், மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த யாகத்தில் 70க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று சஹஸ்ர சண்டி யாக பாராயணம் செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து நாளை 27.07.2017 வியாழக்கிழமை இராகு கேது பெயர்ச்சி யாகத்துடன் காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ வராஹி மூலமந்த்ர விசேஷ ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர் பூஜை, பூர்ணாஹுதி, மங்களார்த்தி, பிரசாத விநியோகம் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.









Sunday, July 23, 2017

Sahasra Chandi Yagam (1000 Chandi Yagam) Started at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில்

சகஸ்ரசண்டி மகாயாகம் துவங்கியது.

இன்று 23.07.2017 முதல்  30.07.2017 வரை எட்டு நாட்கள் 

நடைபெறுகிறது.

உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் ( 1000 சண்டி யாகம் தன்வந்திரி பீடத்தில் இன்று 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை காலை மற்றும் மாலை இரண்டு வேளயும் (தேவி வாக்கின்படி _சுருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) சொல்படி எல்லாவிதமான நன்மைகளும் தேவியின் வாக்கின்படி இந்த யாகத்தில் எல்லோரும் கலந்துகொண்டு சண்டிகா தேவியின் அருளை பெறும்படி கேட்டுகொள்கிறோம்.

ப்ரம்மஸ்ரீ. M.ராமகிருஷ்ண சர்மா, ஸ்ரீவித்யா உபாசகர், ஸ்ரீபுரம், வேலூர், அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த யாகத்தில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனே, இராமேஸ்வரம், திருச்செந்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீவித்யா உபாசகர்கள் பங்கேற்றுவுள்ளனர்.

இன்று காலை 7.00க்கு கோ பூஜை, விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம் புண்ணியாகவாசனம், ரக்‌ஷா பந்தனம், நாந்திச்ரார்த்தம், வாஞ்சாகல்ப கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், மஹா லக்ஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், சுதர்சன யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, நடைபெற்று விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகமும் சதுஷ்ஷஷ்டி யோகினி பைரவர் பலி பூஜைகள், பஞ்ச சூக்த பாராயணம், ,சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் திருவலம் சர்வமங்களா பீடம் ஸ்ரீலஸ்ரீ சாந்தா ஸ்வாமிகள், சென்னை டாக்டர் கோகிலா செல்வராஜ், சிவசந்திரன் தம்பதினர், தேன்மொழி ஜெயபால், ராமசந்திரன் குடும்பத்தினர், திருமதி அலமேலு பாச்கரன், வேலூர் மாவட்ட P.R.O. திரு. இளங்கோ குடும்பத்தினர், சித்தூர் R.T.O திரு ரவீந்திரகுமார் மேலும் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து டக்டர் முரளிதர ஸ்வாமிகள் அருளுரை பிரசாதம் வழங்கினார். இந்த ஹோமத்தில் நூறுவகயான பழங்கள் புஷ்பங்கள் மூலிகைகள் கரும்பு மோதகம் அப்பம் அருகம்புல் நெல்பொரி மற்றும் அஷ்டதிரவியங்கள் அன்ன பிரசாதங்கள் பட்டு வச்திரங்கள் சமர்ப்பிக்கபட்டது. தொடர்ந்து நாளை 24.07.2017 திங்கள் கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, ருத்ர ஜபம், ஏகாதச ருத்ர ஹோமம், வசோத்த்வாரா ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, மரகதேஸ்வரருக்கு அபிஷேகம், பிரசாத விநியோகம். 24.07.2017 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு லலிதா சகஸ்ர நாம பாராயணம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்), மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம் நடைபெருகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








Vara Mahalakshmi Homam / Varalakshmi Homam

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்

04.08.2017ல்

வரலக்ஷ்மி தினத்தை முன்னிட்டு

வரம் அருளும்

ஸ்ரீ வர மஹாலக்ஷ்மி யாகத்துடன் கூழ்வார்த்தல் விழா


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குளந்தைகள் கல்வியில் மேன்மை அடயவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஆடி மாதம் 19ம் தேதி 04.08.2017 வெள்ளிக் கிழமை வரலக்ஷ்மி நோன்பு முன்னிட்டு காலை 9.00 மணிக்கு கோபூஜை கணபதி பூஜையுடன் வரம் அருளும் வர மஹாலக்ஷ்மி யாகமும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் நவ கன்னிகைக்கும் கூழ்வார்த்தல் விழா நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும் முன்ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன.ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன.
வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும்.
ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம்.
இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம். இத்தகைய சிறப்புவாய்ந்த வரலக்ஷ்மி தினத்தில் நடைபெறும் மேற்கண்ட யாகத்திலும் கூழ்வார்த்தல் நிகழ்சியிலும் கலந்துகொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை - 632513
வேலூர் மாவட்டம்.
Ph : 04172-230033  / 230274/9443330203


Saturday, July 22, 2017

Gholakshmi with Rishbaraja Thirukalyana Mahothsavam...







Sahasra Chandi Yagam ( 1000 Chandi Homam)

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் நாளை 

முதல்

சகஸ்ரசண்டி மகாயாகம்.

 23.07.2017 முதல்  30.07.2017 வரை எட்டு நாட்கள் 

நடைபெறுகிறது.


சர்வதேச தரச்சான்றிதழுடன் வேலூர் மாவட்டம் ,வாலாஜாபேட்டை அருகே ஔஷதகிரி என்றும் குபேர பட்டிணம் என்றும் ஆரோக்ய பீடம் என்றும் அழைக்கப்படும் தன்வந்திரி பீடம் அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் 46  லட்சம் பக்தர்கள்  கைப்பட எழுதிய  54 கோடி  தன்வந்திரி லிகித ஜப  மந்திரங்களை  கொண்டு 9 அடி மூலவர்  தன்வந்திரி பெருமாள், ஆரோக்ய லட்சுமி  தாயார், ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவி, 18 கைகளுடன்  ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, போன்ற  73 தெய்வங்களுடன் மகான்களும்  468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக கொண்டு மிகவும் இரம்மியமாக  இயற்கை சூழலுடன்  மூலிகை வாசத் ஸ்தலமாக  அமைந்து  உள்ளது.
ஷண்மத  பீடமாக திகழ்கின்ற தன்வந்திரி பீடத்தில் தினசரி யாகத்துடன் அன்னதானம்மருத்துவ சேவை கோ பராமரிப்பு  நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும்  பல்வேறு வகையான  பிரம்மாண்ட  யாகங்கள் நடைபெற்று  வருகிறது.  குறிப்பாக 365 நாட்கள் 365 விதமான  யாகங்கள், சதசண்டீ யாகம், 365  நாட்கள் சண்டியாகம், 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா  ப்ரத்தியங்கிரா யாகம், லட்சம் நெல்லிக் கனிகளில் கனகதாரா யாகம், 10 லட்சம் ஏலக்காய்களை கொண்டு லட்சுமி ஐயக்ரீவர் யாகம்லட்சத்து முப்பத்திரண்டாயிரம் லட்டுகளை கொண்டு குபேர லட்சுமி யாகம், ஒரு லட்சம் மோதகங்களை கொண்டு வாஞ்சா கல்ப கணபதி யாகம், ஒரு லட்சம் தாமரை பூக்களை கொண்டு மஹா லட்சுமி யாகம், முப்பது லட்சம் தாமரை விதைகளைக் கொண்டு அஷ்ட லட்சுமி யாகம் 74 பைரவர் யாகம், 64 பைரவர் யாகம்,108 கணபதி யாகம், 468 சித்தர்கள் யாகம் 21 ஆயிரம் ஜாங்கிரியை கொண்டும் 11 ஆயிரம் வாழைப்பழத்தை கொண்டும் ஸ்ரீ ஆஞ்சநேயர் யாகம், 21 ஆயிரம் மாதுளை பழத்தை கொண்டு ஸ்ரீ மஹா காளி யாகம், 21 ஆயிரம் வில்வ காய்களுடன் ஸ்ரீ மஹா லட்சுமி யாகம் , ஒரு லட்ச ஜபத்துடன் ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், 24 மணி நேரமும் 27 யாகங்கள், லட்ச த்தி எட்டாயிரம் ஜபங்களுடன் நவகிரக ஹோமம்,நவ துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், 2014 பூசணிக்காயை கொண்டு கூஷ்மாண்ட யாகம், அதி ருத்ரம், மஹா ருத்ரம், ஏகாதச ருத்ரம், 55 நாட்கள் 135 யாகங்கள் போன்ற பல்வேறு விதமான  மஹாயாகங்கள் உலக நலன் கருதி நடைபெற்றுள்ளது. ஸ்ரீ தன்வந்திரி, சுதர்சன ஹோமம், ஸ்ரீ கார்தவீர்யார்ஜீனா ஹோமம், மஹா மிருத்யஞ்ச ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி யாகம், சந்தான கோபால யாகம்,  சத்ரு சம்ஹார ஹோமம்,  சூலினி துர்கா ஹோமம், தேய்பிறை அஷ்டமி யாகம், அமாவாசை யாகம், பௌர்ணமி யாகம், போன்ற கார்ய சித்தி  ஹோமங்களும் மாதம் தோறும்  கயிலை ஞானகுரு  டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி நடைபெற்று  வருகிறது.. 
இத்தகைய  சிறப்புகளுடன் யக்ஞபூமியாக திகழும்  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மனநோய்உடல் நோய் ,தீர்க்கும் வகையில்  அம்மனுக்குரிய  ஆடி மாதத்தை  முன்னிட்டும் இராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டும்  உலக மக்கள் அனைவரும்  ஆனந்தமாக  வாழ வேண்டியும், இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும்  நல்ல மழை பெய்து  விவசாயம் செழிக்க வேண்டியும்  என்ற  வகையில் ஆயிரம் சண்டி மகா யாகம்  என அழைக்கப்படும்  சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது.

தன்வந்திரி பீடத்தில் நாளை 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் ( 1000 சண்டி யாகம் )ஸ்ரீ ஜகன்மாதாவின் அருளால் உலக நன்மைக்காக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞபுருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நிகழும் ஆடி மாத அமாவாசையில் இருந்து வளர்பிறை அஷ்டமி வரை எட்டு நாட்கள் அஷ்ட ஐஸ்வர்யம் பெறுவதற்கு சஹஸ்ர சண்டி யாகம் முப்பத்து முக்கோடி தேவதா ஆஹ்வான பூஜை ஹோமங்கள் அனைத்து ஜீவராசிகளின் ‌க்ஷேமத்தை குறிக்கோளாக கொண்டு 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை காலை மற்றும் மாலை இரண்டு வேளயும் (தேவி வாக்கின்படி _சுருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) சொல்படி எல்லாவிதமான நன்மைகளும் தேவியின் வாக்கின்படி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நடைபெறும் இந்த யாகத்தில் எல்லோரும் கலந்துகொண்டு சண்டிகா தேவியின் அருளை பெறும்படி கேட்டுகொள்கிறோம்.இந்த யாகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், குரு மஹான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

ப்ரம்மஸ்ரீ. M.ராமகிருஷ்ண சர்மா, ஸ்ரீவித்யா உபாசகர், ஸ்ரீபுரம், வேலூர், அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த யாகத்தில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனே, இராமேஸ்வரம், திருச்செந்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீவித்யா உபாசகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

23.07.2017 ஞாயிறு காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம் புண்ணியாகவாசனம், ரக்‌ஷா பந்தனம், நாந்திச்ரார்த்தம், வாஞ்சாகல்ப கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், மஹா லக்ஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், சுதர்சன யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.

23.07.2017 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சதுஷ்ஷஷ்டி யோகினி பைரவர் பலி பூஜைகள், 7.00 மணிக்கு பஞ்ச சூக்த பாராயணம், மங்களார்த்தி,சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

24.07.2017 திங்கள் கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, ருத்ர ஜபம், ஏகாதச ருத்ர ஹோமம், வசோத்த்வாரா ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, மரகதேஸ்வரருக்கு அபிஷேகம், பிரசாத விநியோகம்.
24.07.2017 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு லலிதா சகஸ்ர நாம பாராயணம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்), மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.
25.07.2017 செவ்வாய்க்கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், சுப்ரமண்ய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் மற்றும் அர்ச்சனை, பூர்ணாஹுதி, இடும்பன் பூஜை, மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.
25.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு துர்காஷ்டகம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்) மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.
26.07.2017 புதன் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, யாகசாலை ப்ரவேசம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், எஜமான சங்கல்பம், ரித்விக் வரணம், கலச பிரதிஷ்டை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், திதிநித்யா மூல மந்த்ர விசேஷ ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர்பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.
26.07.2017 புதன் கிழமை மாலை 6.00 மணிக்கு தேவி மஹாத்மியம் சப்தசதி பாராயணம், ஸஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.
27.07.2017 வியாழக் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ வராஹி மூலமந்த்ர விசேஷ ஹோமம், ராகு கேது பெயர்ச்சி ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர் பூஜை, பூர்ணாஹுதி,  மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.
27.07.2017 வியாழக் கிழமை மாலை 6.00 மணிக்கு தேவிமஹாத்மியம் பாராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம் பிரசாத விநியோகம்.
28.07.2017 வெள்ளி கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ சோடஷ மஹால‌ஷ்மி யாகம், ஸ்ரீசூக்த ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை கன்னியா பூஜை, வடுகபைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.
28.07.2017 வெள்ளி கிழமை மாலை 6.00 மணிக்கு, தேவி மஹாத்மியம் பாராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் குபேர ல‌க்ஷ்மி யாகம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.
29.07.2017 சனிக் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், நவ துர்கா ஹோமம், சந்தான பரமேஸ்வரி யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, வடுகபைரவர் பூஜை,  கன்னியாபூஜை, வசுவத்தார ஹோமம், மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.
29.07.2017 சனிக் கிழமை மாலை தேவி மஹாத்மியம் பராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, சதுர்வேத உபசாரம், மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.
30.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், தசமஹாவித்யா ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுக பைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.
30.07.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை தேவி மஹாத்மியம் பராயணம் சண்டி ஹோமம் பாவன உபநிஷத் உபசாரம், மஹா பூர்ணாஹுதி, வசோத்த்வாரா ஹோமம், மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், கலச புறப்பாடு, மஹா அபிஷேகம், விசேஷ ஆராதனை, ரித்விக் சம்பாவணை, அக்‌ஷத ஆசீர்வாதம், மஹா பிரசாதம் வழங்குதல்.
தன்வந்திரி பீடம்  ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தன்வந்திரி  பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யாகம் நடைபெறும்
இதுபற்றி ஸ்தாபகர் டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  கூறுகையில், ஆயிரம் சண்டி யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டி யாகம் மன்னர்களும், அரசர்களும், நாட்டின் நன்மைக்காக செய்து வந்தனர். இதன் பெருமை மக்களுக்கு தெரியப்படுத்த மவுரிய பேரரசு காலத்திலும் அதன்பின் மைசூர் அரசன் காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களிலும் 1963-ம் ஆண்டு நடந்துள்ளது. அன்புடன் உலக மக்கள் ஆரோக்யத்துடன் சகலஐஸ்வரியம்  பெற்று  இறையருளுடன்  ஆனந்தமாய் வாழ வேண்டி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் எட்டு  நாட்கள் ஸ்ரீ சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது  என்றார்.

தொடர்புக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513.
வேலூர் மாவட்டம்.
Ph : 04172-230033 / 230274
Cell : 9443330203