வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி மற்றும் ப்ரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நலமுடன் வாழ
சிறப்பு அபிஷேகத்துடன் மாபெரும் அமாவாசை யாகம் 06.05.2016 வெள்ளிக் கிழமை காலை
10.00 மணிக்கு நடைபெற உள்ளது..மிக உக்ரம் படைத்த ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியை அதர்வண காளி ,சிங்கமுக காளி
என்றும் அழைப்பார்கள். இந்த தேவியை சாந்தப்படுத்த விஷேசமான நாளான அமாவாசையில் இவளுக்கு
பிடித்தமான சிவப்பு மிளகாய், உப்பு, மிளகு மேலும் 108 வகை ஹோம திரவியங்கள்,குண்டத்தில்
இடப்பட்டு மேலும் பட்டு புடவை, பழவகைகள், வேப்பிலை,நெய்,நெய்யில் செய்த இனிப்பு
பட்சணங்களையும் யாக குண்டத்தில் சேர்க்கப்பட உள்ளது.இந்த யாகம் சிறந்த
வேத விற்பனர்களை
கொண்டு நடைபெறுகிறது. ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியை வழிபடுவதால் பில்லி, சூனியம்,ஏவல்,துர் தேவதைகள் மற்றும் துஷ்டர்களையும் அழித்து தன் பக்தர்களை காப்பாற்றி, நல்ல பலவிதமான
செல்வங்களையும்,மக்கட் செல்வத்தையும்,
மன நிம்மதியும், குடும்ப ஒற்றுமையும், ஆரோக்கத்தையும்
கொடுப்பாள் மேலும் பல விதமான நன்மைகளையும் அருள்பாலிப்பாள்.என்பது நிச்சயம். இந்த ப்ரத்யேகமான யாகத்தை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
முன்னின்று நடத்துகிறார்.இதில் பக்த கோடிகள் அனைவரும் இந்த யாகத்தில் கலந்து
கொண்டு ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவி மற்றும் சகல
விதமான தெய்வங்களின் அருளையும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
நல்லாசிகளையும் பெற்று நலமுடன் வாழ விழைகிறோம். சனிபகவானின் மகன் குளிகன் இங்கு
வழிபாடு செய்துள்ளதால் ஜாதகரீதியாக சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்குபெறலாம்.
அமாவாசை யாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள யாகப் பொருட்கள்
மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்கிய பீடம்,கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா வாலாஜாபேட்டை.632513
No comments:
Post a Comment