ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அட்சய திதியை முன்னிட்டு 09.05.2016 திங்கள்கிழமைகாலை10.00 மணிக்கு மகாலட்சுமி மற்றும் குபேரலட்சுமி யாகம்
திருப்பதி
ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன.
சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு
அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை
காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால் ‘வாழப்பிறந்தவனுக்கு
வடக்கு’ என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை
அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு
முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் ‘லட்சுமி குபேரன்’ என்று அழைக்கப்படுகிறார்.
குபேரனுக்கு
ஏற்பட்ட சாபத்தினால் நாடு,
நகரம், பொன், பொருள்
அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார்.
அவரிடம் இருந்து யந்திரத்தை பெற்றார். அந்த யந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை
செய்தால் நல்லது கிடைக்கும். பொன், பொருள், செல்வம் நிறையும். வியாபாரம், தொழிலில் அபிவிருத்தி
ஏற்படும். சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர
கட்டளையிட்டார். மகாவிஷ்ணுவின் மனைவி யான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை
பெற்றாள். தனம், தானியம், சந்தானம்
உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக
நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.
குபேரன்
அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விசுவகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு
அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர்
ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு
மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். இவரது வலதுபுறத்தில் சங்க
நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து
இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம்
செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும்.
தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும். இத்தகைய
சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி குபேரனை தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை
செய்யப்பட்டு உலக மக்களின் நலனுக்காக. அட்சய திதியை முன்னிட்டு 09.05.2016 திங்கள் கிழமை காலை 10.00 மணி அளவில் லட்சுமி குபேர யாகம்,மகாலட்சுமி
யாகத்துடன் பிரார்த்தனை நடக்கிறது.
ஓம்
யக்ஷய குபேராய வைஸ்ரவணாய தநதா நியாதி பதயே
தந்தாந்ய
ஸம்ருத்திம்மே தேவி தாபய ஸ்வாஹா’
என்ற
குபேரனின் மந்திரத்தை தியானித்து அவனை வழிபட வேண்டும்.
அட்சய
திருதியை சிறப்புக்கள்..!
1.பகவான் பரசுராமர் அவதரித்த நாள்..!
2.கங்கை நதி பூமியை தொட்ட நாள்..!
3.திரேதா யுகம் ஆரம்பமான நாள் ..!
4.குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்..!
5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்...!
6.பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்..!
7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்..!
8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்..!
9.அன்னபூரணி தேவி அவதரித்த நாள்.
10.இந்நாளில் தான,தர்மங்களை அளவின்றி குறையில்லாமல்
செய்ய வேண்டும்.
தங்கமோ,நகையோ வாங்க சொல்லி
சனாதன தர்மம் சொல்லவில்லை.இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு
ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா வாலாஜாபேட்டை.632513
No comments:
Post a Comment