Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, May 30, 2016

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற 04.06.2016 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அமாவாசை யாகம் திருஷ்டி துர்கா மற்றும் சூலினிதுர்காஹோமம்.



 வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில்  tவருகிற  வைகாசி அமாவாசையை முன்னிட்டு  அமாவாசை யாகமாக திருஷ்டிதுர்காஹோமம் மற்றும்சூலினி துர்கா ஹோமம் நடைபெறஉள்ளது
இதனை தொடர்ந்து ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கும், யக்ஞ சொருபிணி ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிராதேவிக்கும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள்நடைபெறஉள்ளது..என்று கயிலைடாக்டர்ஞானகுருஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் திருஷ்டிஎனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன.
தீராத வியாதிக்குக்கூட மருத்துவர்களைச் சந்தித்து மருந்து வாங்கி நிவாரணம் பெற்று விடலாம். ஆனால், திருஷ்டி என்கிற கொடூர நோய்க்கு உள்ளாக நேர்ந்து விட்டால், அவ்வளவுதான்! சொத்து, சுகம், நிம்மதி, அன்பு & இப்படி எதுவுமே நம்மிடம் தங்காது. காரணம் & இது கலி காலம். ஒருவரது முன்னேற்றம் இன்னொருவரது முன்னேற்றத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுகிற காலம் இது. போட்டியும் பொறாமையும் தலை விரித்து ஆடுகின்றன.
எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது. வீடுகளில் வசிப்பவர்கள் ஆரத்தி சுற்றுதல், எலுமிச்சம்பழம் உடைத்தல், பூசணிக்காய் உடைத்தல் போன்றவற்றை அடிக்கடி நிகழ்த்துவது திருஷ்டி கழிப்பதற்குத்தான். அதே சமயம் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருஷ்டி கழிக்கும் பிரமாண்ட ஹோமங்கள் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடிக்கடி நடந்து வருகின்றன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் திருஷ்டி அகலப் பெற்று வாழ்வில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறார்கள்.
இத்தகைய திருஷ்டி ஹோமங்களில் பக்தர்கள் கலந்து கொள்வதால், இருக்கிற திருஷ்டி அகல்வதோடு ராகு திசை நடப்பவர்களுக்கும் ராகு புக்தியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு சனி தசை, சனி புக்தி நடப்பவர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்று அருள் பெறலாம்.மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் இந்த ஹோமம் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறுகிறது.
உலக மக்களின் நலன் கருதியும், இயற்கைச் சீற்றங்கள் குறைந்து, சகல வளங்களையும் அனைவரும் பெறும் வண்ணம் இவை நடக்க உள்ளன. மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, நாயுருவி, சிகப்பு அரளி, 108 மூலிகைகள், கல் உப்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகைகள், சிகப்பு குங்குமம், மஞ்சள், முறம், வெள்ளை பூசணிக்காய் ஆகியவற்றைக் கொண்டு இந்த மஹா யாகம் பல அருளாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
எனவே பக்தகோடிகள் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்திருந்து இந்த யாகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீதன்வந்திரி பெருமாளையும், மற்றும் இங்குள்ள 73 பரிவார தெய்வங்களையும், வேறெங்கும் தரிசிக்க இயலாத 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,வாலாஜாபேட்டை 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172230033, செல் 9443330203

www.danvantritemple.org.
www.danvantripeedam.blogspot.in
E-mail : danvantripeedam@gmail.com.

.

No comments:

Post a Comment