Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, March 24, 2015

ஏப்ரல் 2,3,4,5, 2015ல் தன்வந்திரி பீடத்தில் விடுமுறை கால சிறப்பு ஹோமங்கள்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 2.4.2015 வியாழன் முதல் 5.4.2015 ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10.00 முதல் 1.00 மணி வரை விடுமுறைக் கால சிறப்பு ஹோமங்கள் நடைபெற உள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளிலும், மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற வெளிநாடுகளிலும் மாணவ, மாணவியர்கள் ஆண்டு தேர்வுகளை எழுதி வருகின்றனர். ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகள் ஏப்ரல் மாதம் முதல் விடுமுறையாகவும், ஒரு சில பள்ளிகள் மே மாதம் முதல் விடுமுறையாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடுமறையை நல்ல முறையில் நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களும், மற்றவர்களும் கருதி வருகின்றனர்.

ஒரு சிலர் தன்னுடைய குழந்தைகளை யோகா, தியானம், வாழ்வியல் பயிற்சிகள் போன்ற இடங்களில் குழந்தைகளை சேர்க்க விரும்புகின்றனர். மேலும் ஒரு சிலர் தங்களது வேண்டுதல்களை பூர்த்தி செய்யும் விதமாக பலவிதமான ஷேத்ரங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்கின்றனர். சிலர் வருகிற ஆண்டுத் தேர்வு முடிவுகள் நல்ல முறையில் வர வேண்டும். அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர் கல்வி சேருவதற்காகவும், வயது மூத்த ஆண், பெண்களுக்கு விரைவில் உத்யோகம், தொழில், திருமணம், வெளிநாடு செல்லும் பாக்யம் போன்றவைகளுக்காக பற்பல ஆலயங்களுக்குச் சென்று பரிகார பூஜைகளை செய்ய வேண்டும் என்று திட்டமிடுவார்கள்.

இத்தகைய செயல்களை மனதில் கொண்டு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மேற்கண்ட அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் விதத்தில் 73க்கும் மேற்பட்ட திருச்சந்நிதிகளை அமைத்து 468 சித்தர்களை சிவலிங்க ரூபத்தில் ப்ரதிஷ்டை செய்து, 20க்கும் மேற்பட்ட பசுக்களை பராமரித்துக்கொண்டு நித்ய அன்னதானம், நித்ய சண்டி யாகம், நித்ய ஹோமங்கள் என்று பல்வேறு பூஜைகளையும், யாகங்களையும் செய்து வருகிறார். மேலும் யோகா மருத்துவம், மூலிகை பராமரிப்பு, வேதாந்த வாழ்வியல் மையம் என்று பல்வேறு துறைகளை அமைத்து மக்களுக்கு சேவைகளை புரிந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வருகிற விடுமுறை காலங்களை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் 27 விதமான காரியசித்தி ஹோமங்களை வருகிற 2.4.2015 வியாழன் முதல் 5.4.2015 ஞாயிற்றுக்கிழமை வரை தன்வந்திரி பீடத்தில் நிகழ்த்த உள்ளார். அவை குறிப்பாக சரஸ்வதி ஹோமம், வித்யா ஹோமம், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், சந்தான கோபால ஹோமம், மகா பைரவர் யாகம், கார்த்தவீர்யார்ஜூனர் ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், சுயம்வரகாலா பார்வதி ஹோமம், கந்தர்வராஜ யாகம், காமோகர்ஷண யாகம், சூலினிதுர்கா யாகம், நட்சத்திர சாந்தி யாகம் போன்ற 27 யாகங்களை 3 நாட்களுக்கு தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நிகழ்த்த உள்ளார்.

இவை மட்டுமின்றி சகல தேவதா காயத்ரி ஹோமமும், மாலையில் நித்ய மங்கள சண்டி யாகமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் விடுமுறை காலத்தில் மேற்கண்ட யாகங்களில் பயன்படுத்திக் கொண்டு அனைத்து செயல்களிலும் வெற்றி பெற ப்ரார்த்திக்கின்றோம்.

குறிப்பு : மேற்கண்ட ஹோமங்களில் ஒரு நாளைக்கு பங்கேற்க குடும்பத்திற்கு ரூ.11,000 மட்டுமே.

மேலும் விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
Website : www.danvantritemple.org

e-Mail : danvantripeedam@gmail.com

No comments:

Post a Comment