வாஸ்து
விழிக்கும் நாளில் மக்கள் அவரை
வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைப்பது
மட்டுமல்லாமல் மனிதர்கள் குடியிருக்கும் இடங்களைச் சுற்றி தோஷங்கள் அண்ட
விடாமல் பாதுகாப்பது வாஸ்து பகவானின் வேலையாகும்.
பல
லட்சங்கள் செலவு செய்து பெரிய
பெரிய கட்டிடங்களும், அலுவலகங்களும், வீடுகளும், தொழிற்சாலைகளும் கட்டி குடியேறுகின்றனர். அங்கு
குடியேறியபின் குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நஷ்டம் இப்படி எண்ணற்ற
பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இதன் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால்
முறையாக வாஸ்து பார்த்துக் கட்டியிருக்க
மாட்டார்கள். கட்டிய பின்னர் வாஸ்து
பார்த்து திருத்தியமைக்க விரும்பினால், வீண்விரயங்களும் தேவையற்ற பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன.
மேலும்
முறையான வாஸ்து அமைந்த கட்டிடத்தில் குடியிருப்பதால் முதலில் மன நிம்மதி, உடல்
ஆரோக்கியம், நல்வழி, நல்லவர்கள் தொடர்பு,
ஏமாறாமல் இருப்பது, ஏமாற்றாமல் இருப்பது, குடும்ப ஒற்றுமை, உறவினர்கள்
உறவு, எதிரிகள் தாக்குதலில் நிவர்த்தி போன்ற சகல நன்மைகள்
உருவாகும்.
மேலும்
புதிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கட்ட இருப்பவர்களுக்கு, வாஸ்து
பகவானிடம் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கல்,
மண், வாஸ்து யந்திரம் போன்றவைகள்
மக்கள் நலன் கருதி ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வழங்கி
வருகிறோம், வாஸ்து
நாளான 06.03.2015 இன்று காலை 10.00 மணியளவில்
வாஸ்து பகவானுக்கு பூஜையும், வாஸ்து ஹோமமும் நடைபெற்றது.
இதில் கர்நாடகா, ஆந்திரா, புதுவை போன்ற
மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்
என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment