வேலூர் மாவட்டம்,
வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு
காலை 4.00 மணியளவில் தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்காரமும் செய்யப்பட்டு
சொர்க வாசல் தரிசனத்தில் பக்தர்கள் தரிசித்து பரவசம் அடைந்தனர்.
மேலும் பத்து லட்சம்
ஏலாக்காய் கொண்டு மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறும் வகையில் கோபூஜையுடன்
கணபதிக்கே உரிய மோதகங்கள், அருகம்புல், வெள்ளெருக்கம், கரும்பு போன்ற அஷ்ட திரவியங்கள்
கொண்டு முதல் நாளான (01.01.2015) இன்று வித்யா கணபதி ஹோமத்துடன் பத்துலட்சம் ஏலக்காய்
ஹோமம் சிறப்பாக துவங்கியது.
இந்த ஹோமத்தில்
மைசூர் கருமாரியம்மன் பீடம் பீடாதிபதி சுரேஷ் ஆச்சாரியார் மற்றும் வேலூர் மாவட்டம்
உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர் உயர்திரு. இளங்கோவன், இராணிப்பேட்டை தேவராஜ் ஆடிட்டர்,
தொழிலதிபர் பச்சையப்பன், வார்டு உறுப்பினர் W.G.முரளி, சென்னை மருத்துவர் ரங்கராஜன், ஊட்டி இராஜசேகர் மற்றும்
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாவியரும் கலந்து கொண்டு கூட்டுப்பிரார்த்தனை
செய்து ஹோமத்தில் வைத்த எழுது பொருட்கள், மாணவ,
மாணவியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த ஹோமத்தை ரஜீவ்காந்தி
சிவம், விவேகானந்த சிவம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் நடத்தித்தந்து
சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து
நாளை ஸ்ரீ சரஸ்வதி ஹோமமும், வித்யா ஹோமமும், 3.1.2015 அன்று ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்
ஹோமமும், 4.01.2015 ஸ்ரீ ஹயக்ரீவர் தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்று
பயன்பெற ப்ரார்த்திக்கின்றோம். இத்தத்தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment