வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் பத்து
லட்சம் ஏலாக்காய் கொண்டு மாணவ, மாணவியர்கள் கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறவும், மாணவ,
மாணவியர்களுக்குள் நல்ல ஒற்றுமை ஏற்படவும் வேண்டி மேற்கண்ட ஹோமம் நடைபெற்றது.
இதில் இன்று (4.01.2015) பூர்ணாஹூதியில் விசேஷ திரவியங்களுடன்,
இரண்டு இலட்சம் ஏலக்காய்கள் சேர்க்கப்பட்டது. ஏராளமான மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள்,
ஆசிரியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
4வது நாளான இன்று பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும்
மாணவ, மாவியரும் கலந்து கொண்டு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான
மாணவ, மாணவியர்கள் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை பெற்றுச் சென்றனர்.
மேலும் 5.1.2015 திங்கட்கிழமை நாள் முழுவதும் நடைபெற உள்ள
சிவ பஞ்சாக்ஷரி யாகத்தில் 10,000 சிவனடியார்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்த யாகத்தின் போது சிவனடியார்களுக்கு வஸ்த்திர தானமும், பத்தாயிரம் பேருக்கு சிறப்பு
அன்னதானமும் நடைபெற உள்ளது என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment