Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, January 31, 2015

தன்வந்திரி பீடத்தில் வள்ளலார் சிறப்பு வள்ளலார் ஹோமம்…

அருளாளர் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) வடலூரில் சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பி வந்தவர். இவர் 1874-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி!

அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து. தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் அடிகள்!

இத்தனை அற்புதங்கள் நிறைந்த வள்ளலாருக்கென்று தன்வந்திரி பீடத்தில் தனி சன்னதி அமைத்து பூஜைகளும், ஹோமங்களும் செய்து வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். அந்த வகையில் உலக மக்களின் நலன் கருதி வருகிற 3.2.2015 செவ்வாய்க்கிழமை தைபூச நன்னாளை முன்னிட்டும், வள்ளலார் ஜோதியில் கலந்த நன்னாளை முன்னிட்டும் பீடத்தில் அமைந்துள்ள வள்ளலாருக்கு சிறப்பு பூஜையும், வள்ளலார் ஹோமமும் நடைபெற உள்ளது.

வள்ளலார் கொள்கைகளான ஜீவ காருண்யம், மன அமைதி, மனித நேயம், அன்னதானம்,  மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, ஜாதி, இனம், சமுதாய வேறுபாடின்றி நடப்பது, எக்காரியத்திலும் பொதுநோக்கத்தோடு இருப்பது போன்ற கொள்கைகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த ஹோமம் ஸ்வாமிகள் நடத்த உள்ளார்.

இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கப்பெற்று அனைவரிடத்தும் அன்பு செலுத்தும் எண்ணமும் மேலோங்கும். இதனால் வாழ்வில் சகலமும் பெற்று வளமுடன் வாழ வழிவகைச் செய்யும். ஆகவே பக்தர்கள் அனைவரும் வள்ளலார் ஹோமத்திலும், தொடர்ந்து நடைபெறும் சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் ப்ரார்த்திக்கின்றோம்.

தொடர்புக்கு.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்.
போன் : 04172-230033, 230274.

Thanks to Dinamani paper at 31.01.2015


Friday, January 30, 2015

Thanks to Sakshi Telugu Edition 06.01.2015


தன்வந்திரி பீடத்தில் 1008 சுமங்கலிகள் பங்கேற்ற சுமங்கலி பூஜை சிறப்பாக நடைபெற்றது….












வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி 1008 சுமங்கலி பூஜையுடன் ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்ப ரக்ஷாம்பிகை யாகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதில் 1008 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை வேண்டியும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல் வேறு வேண்டுதல்களை முன்வைத்து  கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.

மேலும் வேலூர் மாவட்ட  ஆட்சியர் முனைவர் திரு. நந்தகோபால், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் திரு. மணிலா, வருவாய் ஆய்வாளர் திரு. சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் கல்யாணராமன், இராணிப்பேட்டை கோட்டாட்சியர் பிரியதர்ஷ்ணி மற்றும் அரசு அதிகாரிகள், உயர் நீதிமன்ற அதிகாரிகள், ஊர் தலைவர்கள், ஊட்டி ராஜசேகர், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, தன்வந்திரி படம், தன்வந்திரி பிரசாதம், தன்வந்திரி பை, இனிப்பு, மற்றும் அன்னபிரசாதம் முதலியன வழங்கப்பட்டன.

இந்த பூஜைக்குத் தேவையான பொருட்களை புதுடில்லி ஸ்ரீமதி, ஸ்ரீ A.V.வெங்கட்நாத், சென்னை, திரு.பட்டாபிராமன் மற்றும் பொதுமக்களும் உதவிகளை செய்து சிறப்பித்தனர்.

மேலும் 10க்கும் மேற்பட்ட சிறந்த வேதவிற்பன்னர்களைக் கொண்டு ஹோமங்கள் சிறப்பாக நடைபெற்றது. ஹோமத்தின் முடிவில் கலச தீர்த்தத்தைக் கொண்டு பீடத்தில் அமைந்துள்ள ஆரோக்ய லட்சுமி தேவிக்கும், மரகதேஸ்வர சமேத மரகதீஸ்வரி தேவிக்கும் சிறப்பு அபிஷேம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தனர். திருமதி. நிர்மலா முரளிதரன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

Monday, January 12, 2015

தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்டபைரவர் யாகங்கள்…

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்டபைரவர் யாகங்கள் 13.01.2015 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது.

நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளை வேண்டி, காலை 10 மணி முதல் 01 மணி வரை சொர்ண பைரவர் ஹோமமும் மாலை 6மணி முதல் 7 மணி வரை அஷ்டபைரவர் சகித, காலபைரவர் ஹோமம் நடைபபெற உள்ளது. செல்வத்துக்கு அதிபதியான மஹாவிஷ்ணு, மஹாலட்சுமி, குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கொடுத்தவர் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார் என்பது நாம் அறிந்ததே.

தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்; அதனால், நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்; அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும் மேலும் வழக்குகளில் வெற்றி பெறவும் தம்பதிகள் ஒற்றுமைக்கும் வெளிநாடு செல்வதற்கும் வியபாரம் தொழில் உத்தியோகம் மேம்படவும், செய்வினை, திருஷ்டி, மனதடைகள் நீங்கவும் ஐஸ்வர்யங்கள் பெறுக, மேற்கண்ட ஹோமங்கள்  நடைபெற உள்ளது.

இந்த ஹோமங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு அனைத்து தோஷங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ ப்ரார்த்திக்கின்றோம்.

இதனைத் தொடர்ந்து மாலையில் பொங்கல் தினங்களை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலைமதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை : 04172-230033 / 230274
வேலூர் மாவட்டம்.

Saturday, January 10, 2015

Thanks to Balajothidam Vol.31 Issue 03


தன்வந்திரி பீடத்தில் சமத்துவ பொங்களுடன் 11 ம் ஆண்டு 15.01.2015 வியாழக் கிழமை புனித நூல்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது

தன்வந்திரி பீடத்தில் சமத்துவ பொங்களுடன் 11 ம் ஆண்டு 15.01.2015  வியாழக் கிழமை புனித நூல்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.பண்டைய காலங்களில் ஆன்மிக நுல்கள் படிப்பது என்பது அனைத்து மக்களிடமும் இருந்து வந்தது. படித்த அந்த கருத்துக்களை பிள்ளைகளிடம், பேரக் குழந்தைகளிடம் கதைகளாக சொல்லி நல்லொழுக்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தனர்.
பண்டைய காலங்களில் ஆன்மிக நுல்கள் படிப்பது என்பது அனைத்து மக்களிடமும் இருந்து வந்தது. படித்த அந்த கருத்துக்களை பிள்ளைகளிடம், பேரக் குழந்தைகளிடம் கதைகளாக சொல்லி நல்லொழுக்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தனர்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. தாத்தா, பாட்டிகள் காதை சொல்வது குறைந்து விட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வது குறைந்து விட்டது என்றால் அதில் சந்தேகமில்லை.

ஒரு இளைஞனை நிறுத்தி! நீ குருமார்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டால், குருமார்களா அப்படியென்றால் யார் என்று கேட்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் தெய்வங்களாலும், குருமார்களாலும் மனித வளர்ச்சிக்காக எழுதப்பட்ட எண்ணற்ற நுல்கள் உள்ளன. ஏன் இன்னும் அச்சில் ஏறாத பழைய ஓலைச் சுவடிகள் கூட உள்ளன எனலாம்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம்,  மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், அதே போல் 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறிஸ்துவின் வேதாகமம், அல்லாவின் குரான் என பலவிதமான நுல்கள் இருந்து வருகின்றன. மேலும் பல மகான்கள் எழுதிய பல்வேறு நூல்களும் உள்ளன. இதுபோன்று ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத குருமார்களையும், தெய்வங்களையும் பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல் ஒழுக்கமும், மனித நேயமும், மத நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் குருவருளுடன் தமிழர் திருநாளில் 15.01.2015  வியாழக் கிழமை பகல் 12.00 மணி முதல் 1.00 மணிவரை சமத்துவ பொங்கல் நடைபெற உள்ளது. மேற்கண்ட புனித நூல்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இந்த அற்புதமான விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம்.இந்த தகவலை கயிலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகள் தெரிவித்தார்.

Thanks to Deccan Chronicle 07.01.2015 January


Sumangali pooja with 1008 sumangalis on Jan 30


Sumangali pooja with 1008 sumangalis on Jan 30
Walajapet: 1008 Sumangalis will participate in the special Sumangali pooja to be held at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on January 30, 2015.
 Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said the Sumangalis who will participate in the pooja would be provided tamboolam by the Peedam including saree, blouse piece, betel leaves and nuts, kumkum, turmeric, mirror and  comb among other items on behalf of the Peedam.
 Sri Suktha homam would be conducted along with Garba Rakshambigai yaagam. The participants will also worship before the deities of the Peedam and pray for well-being of their families.  The sumangali pooja would be conducted at 10 a.m. on Friday, January 30, 2015.
 The devotees will also take part in a joint prayer for well-being of mankind.

 Women will derive dheergasumangali bhaagyam and benefit of progeny besides improvement in family ties.

Friday, January 9, 2015

Sumangali pooja with 1008 sumangalis on Jan 30

Walajapet: 1008 Sumangalis will participate in the special Sumangali pooja to be held at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on January 30, 2015. 

Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said the Sumangalis who will participate in the pooja would be provided tamboolam by the Peedam including saree, blouse piece, betel leaves and nuts, kumkum, turmeric, mirror and  comb among other items on behalf of the Peedam. 

Sri Suktha homam would be conducted along with Garba Rakshambigai yaagam. The participants will also worship before the deities of the Peedam and pray for well-being of their families. 

The sumangali pooja would be conducted at 10 a.m. on Friday, January 30, 2015. The devotees will also take part in a joint prayer for well-being of mankind. Women will derive dheergasumangali bhaagyam and benefit of progeny besides improvement in family ties.