நன்றி தினமலர் 21.10.14.
வேலூர்: தன்வந்திரி பீடத்தில், 25 ஆயிரம் பேருக்கு, தீபாவளி லேகியத்தை, முரளிதர ஸ்வாமிகள் வழங்கினார். வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டையில் உள்ள, தன்வந்திரி பீடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தீபாவளி லேகியம் வழங்கும் விழா நேற்று நடந்தது. முரளிதர ஸ்வாமிகள், 25 ஆயிரம் பேருக்கு தீபாவளி லேகியத்தை இலவசமாக வழங்கி பேசியதாவது: தன்வந்திரி ஸ்வாமி மகா விஷ்ணுவின் அம்சம். பன்னிரு கரங்களில் சங்கு சக்கரத்தை, ஒரு கரத்தில் அமிர்த்த கலசம், மற்றொரு கரத்தில் சீந்தலைக் கொடியுடன் காட்சி அளிக்கின்றார். அக்காலத்தில் மருத்துவ முறையில் நோயை உடலில் இருந்து விரட்ட, கெட்ட ரத்தத்தை உறுஞ்சி எடுத்து, நோயை குணமாக்க அட்டை பூச்சிகளை பயன் படுத்தினர். இப்போதும், இந்த முறையை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால்தான், தன்வந்திரி விக்கிரகத்தில் அட்டை பூச்சி இடம் பெற்றுள்ளது. தன்வந்திரி அவதார தினத்தையொட்டி தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான நேற்று மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம் வைத்து தன்வந்திரி மந்திரங்கள் உச்சரித்து தன்வந்திரி சன்னதியில் இந்த லேகியம் தயாரித்து, நைவேதியம் செய்து தீபாவளி தன்வந்திரி லேகியமாக வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment